- Home
- Tamil Nadu News
- ஈரோடு
- மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Vijay Speech
விஜய் பேசியதாவது : “மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரு தீர்வு கூட சொல்லாம, பெருமையா மாடல் அரசுனு சொல்றாங்க. இல்ல நான் கேக்குறேன் உங்களுக்கு கூச்சமா இல்லை, இதையெல்லாம் எதிர்த்து கேட்டால், நம்ம பக்கம் யூ டர்ன் அடிச்சு வந்திருவாங்க. விஜய் என்ன அரசியலே பேச மாட்டேங்குறாரு, விஜய் என்ன சினிமா டயலாக் மாதிரி பேசுறாரு. விஜய் என்ன 8 நிமிஷம் தான் பேசுறாரு, 9 நிமிஷம் தான் பேசுறாருனு சொல்லுவாங்க. நான் எத்தனை நிமிஷம் பேசுனா உங்களுக்கு என்ன சார். நான் எப்படி பேசுனா உங்களுக்கு என்ன சார். உள்ள விஷயம் என்னனு மட்டும் பாருங்க.
அந்த அரசியல் நமக்கு வராது
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் மக்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கு என்பதை எடுத்து பேசிக்கிட்டு இருக்கேன் அது அரசியல் இல்லாம வேற எது தான் அரசியல். உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது தான் அரசியல் என்றால் அந்த அரசியல் நமக்கு வராது. காஞ்சிபுரத்துல நாம பேசும்போது, நம்மால் அமைக்கப்படப்போகும் ஆட்சியில் என்னென்ன செய்வோம் என சிலவற்றை சொன்னோம். அதையெல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டிருங்கீங்க.
விஜய் எப்பவுமே மக்கள் பக்கம் தான்
நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம்னு சொல்வீங்க. அப்படியே செஞ்சாலும் ஓசில போறனு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க. கேக்குறதுக்கு ஆள் இல்லைனு நினைச்சீங்களா. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். இந்த விஜய் வந்து கேள்வி கேட்பான். இந்த விஜய் எப்பவுமே மக்கள் பக்கம் தான். அதேமாதிரி மக்களும் என் பக்கம் தான். என் மக்கள் மானத்தோடும், மரியாதையோடும், கெளரவத்தோடும் வாழனும்.
நாங்க என்ன வாயிலயே வடை சுடுறதுக்கு திமுக-வா?
என் மக்கள் யாருக்கும் கீழ கிடையாது. அப்படி அவங்க கெளரவத்தோட வாழனும்னா அவங்களுக்கான வாழ்க்கை தரம் உயரணும். அவங்களோட வாழ்வாதாரமும் உயரனும், அது உயர்ந்தால் தான் அவர்களின் பொருளாதாரம் உயரும். இதுக்கான வழிகளை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களை செயல்படுத்தனும். இதெல்லாம் செஞ்சால் தான் அந்த அரசாங்கம், நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்றைக்கு காஞ்சிபுரத்தில் சொன்னோம். சொன்னா மட்டும் போதுமா எப்படி செயல்படுத்துவீங்கனு கேக்குறாங்க. நாங்க என்ன வாயிலயே வடை சுடுறதுக்கு திமுக-வா? டிவிகே டா” என ஆவேசமாக பேசி இருந்தார் விஜய்.

