ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் இன்று நடைபெறும் தவெக பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அஜித் பேனர் கவனம் ஈர்த்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
TVK Erode Campaign : கரூர் தள்ளுமுள்ளு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் பொதுக்கூட்டத்தை ஈரோட்டில் உள்ள மூங்கில்பாளையம் மைதானத்தில் இன்று நடத்துகிறது. இதில், கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜய், ஆதரவாளர்களிடையே உரையாற்றுகிறார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டி, விஜய் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெக பொதுக்கூட்டத்தில் அஜித் பேனர்
இந்த நிலையில் ஈரோடு தவெக பொதுக்கூட்டத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நிற்கும் புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்று இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனரில் நண்பா, இது மந்திரிகள் ஆடும் பொம்ம சர்க்கார் அல்ல, மக்கள் ஆளும் நம்ம சர்க்கார் என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் விஜய்க்கு அஜித் ரசிகர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்த பேனர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரோடு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தவெக தொண்டர்கள் அதிகாலை முதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் ஈரோடு விஜயமங்கலம் பகுதி தளபதியின் கோட்டையாக மாறி இருக்கிறது. அங்கு வந்திருக்கும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்களை வழங்கவும் செங்கோட்டையன் உத்தரவிட்டிருக்கிறார். காலையிலேயே பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் பார்வையிட்டார்.


