"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷினி ஹரிப்ரியன், சுந்தரமூர்த்தி என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். சக நடிகை ஃபரினா ஆசாத் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததன் மூலம் இந்தத் திருமணச் செய்தி வெளியானது.

கெட்டிமேளம் கேட்டமேளம்.!
விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன், பிப்ரவரி 15-ம் தேதியான இன்று சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திடீர் திருமணமும் கசிந்த வீடியோவும்.!
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, தனது திருமணம் குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை. ஆனால், திருமணத்தில் கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா டீம் மூலம் செய்தி கசிந்தது. குறிப்பாக, வில்லி வெண்பாவாக நடித்த ஃபரினா ஆசாத், திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மணமக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வாழ்த்திய திரையுலக நண்பர்கள்
இந்தச் சுப நிகழ்ச்சியில் சீரியல் நாயகன் அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் மற்றும் காவ்யா அறிவுமணி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரோஷினி ஏன் இவ்வளவு ரகசியமாகத் திருமணத்தை நடத்தினார் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை
சீரியலில் இருந்து விலகிய பிறகு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஷினி, பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தினார். முதலில் சூரியின் கருடன் படத்தில் நடித்தார். பின்னர் 2025-ல் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது மணவாழ்க்கையில் இணைந்துள்ள ரோஷினி - சுந்தரமூர்த்தி தம்பதியினருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தனது வாழ்வின் புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ள ரோஷினி
சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ரோஷினி ஹரிப்ரியன், தற்போது திருமண பந்தத்தில் இணைந்து தனது வாழ்வின் புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ளார். திரையில் பல போராட்டங்களைக் கடந்த 'கண்ணம்மா', நிஜ வாழ்க்கையில் சுந்தரமூர்த்தியுடன் இணைந்துள்ள இந்தத் தருணம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. மணமக்கள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துவோம்!

