- Home
- Tamil Nadu News
- தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள் ? திமுகவை இறங்கி அடிக்கும் விஜய்
தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள் ? திமுகவை இறங்கி அடிக்கும் விஜய்
ஈரோடு விஜயமங்கலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், பெரியார் பெயரைச் சொல்லி கொள்ளையடிப்பவர்களே தனது கொள்கை எதிரி என ஆவேசமாக அறிவித்தார். தனது மக்கள் தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் தன்னுடனே நிற்க வேண்டும்.

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் பேசுகையில்: அண்ணா அக்கா தங்கைகள் நண்பா நம்பிகள் என அனைவரும் கொடுக்கும் ஆதரவை கெடுக்க அவதூறுகள் பரப்பப்படுகிறது. அவதூறை நம்பி சிலர் பிழைப்பை நடத்துகின்றனர். எனது 10 வயது முதல் தமிழக மக்களின் மக்களுடன் உள்ள தொடர்பு யாராலும் கெடுக்க முடியாது.
உங்களை நம்பி தான் வந்துள்ளேன் என்னுடன் வாழ்நாள் முழுவதும் நிற்பீர்களா என தொண்டர்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார். உங்களுடன் நிற்போம் என விஜய் சூழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பதில் கூறி முழக்கமிட்டனர். மக்கள் என்னை ஒருநாளும் கைவிட மாட்டார்கள் என்றார்.மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டுமே அடித்து விடுகின்றனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர் அண்ணாவும் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் சொத்து. அண்ணா, எம்ஜிஆரை நாங்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீர்கள். பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளையடிக்கும் கும்பல்தான் நமது கொள்கை எதிரி. எதிரிகள் யாரென்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி களத்தில் இல்லாதவர்கள் எல்லாம் எதிர்க்க முடியாது என விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லைதானே. பின் ஏன் கதறுகிறீர்கள். உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் துணை என்றார்.

