- Home
- Tamil Nadu News
- நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Congress: விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக விஜய் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தவெக தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என பேசியிருந்தார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக, திமுக, காங்கிரஸ் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கண்டனம்
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்றத்தில் அல்லது ஊடகங்களில் நேரிடையாக விளக்கம் கொடுக்க பயப்படும் பிஜேபி கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் பெண்களை குறித்து உயர்வான சிந்தனையை எப்படி எதிர்பார்க்க முடியும் என காங்கிரஸ் எம்.பி.சுதா கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.சுதா
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில்: பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் விஜய் குறித்து பேச்சு நாகரிகமற்றது, திராவிட இயக்கத்தில் அரசியல் செய்த காலங்களில், பெண் உரிமை,பெண்கள் சமத்துவம் இவற்றை மேடைகளில் பேசிய அரசியல் செய்தவர் இன்று பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் பொது வெளியில் ஊடகங்களில் பேசுகிறார் என்றால் அதுதான் RSS பிஜேபி யின் சானாதன சித்தாந்தத்தின் வெளிபாடு, பெண் ஆணுக்கு சமம் இல்லை என்ற பழைமை வாத கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட கட்சியில் தலைமை வகிப்பதால் அதற்கு ஏற்றவாறு பேசி வருகிறார்.
பிஜேபி கட்சி
இவர் சார்ந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே எப்ஸ்டீன் பைல் பட்டியலில் சிக்கி தவிப்பதை அமெரிக்கா நீதிமன்றத்தால் வெளிடபட்ட ஆவணங்களில் காணமுடிகிறது. இப்படி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்றத்தில் அல்லது ஊடகங்களில் நேரிடையாக விளக்கம் கொடுக்க பயப்படும் பிஜேபி கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் பெண்களை குறித்து உயர்வான சிந்தனையை எப்படி எதிர்பார்க்க முடியும், இனிமேலாவது பொது வெளியில் இழிவாக விமர்சனம் செய்வதை நிறுத்து கொள்ள வேண்டும், எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ அந்த பெண்ணிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என எம்.பி. சுதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

