- Home
- Tamil Nadu News
- ஈரோடு
- இது தீர்ப்பளிக்கும் கூட்டம்... புரட்சி தளபதியை முதல்வராக்குவோம் - ஈரோட்டில் அனல்பறக்க பேசிய செங்கோட்டையன்
இது தீர்ப்பளிக்கும் கூட்டம்... புரட்சி தளபதியை முதல்வராக்குவோம் - ஈரோட்டில் அனல்பறக்க பேசிய செங்கோட்டையன்
ஈரோடு விஜயமங்கலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் செங்கோட்டையன் அனல்பறக்க பேசி இருக்கிறார். அதை பார்க்கலாம்.

Sengottaiyan Speech
மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் சமீபத்தில் தவெக-வில் இணைந்ததால் இந்தக் கூட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், நீண்டகால கட்சித் தலைவருமான செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, நவம்பர் இறுதியில் முறைப்படி தவெக-வில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, தவெக-வின் உயர்மட்ட செயற்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
ஒரு திராவிடமற்ற கட்சியின் பிரதிநிதியாக செங்கோட்டையன் கலந்துகொள்ளும் இந்தப் பொதுக்கூட்டம், அவரது அரசியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அவரது வருகை, குறிப்பாக மேற்குத் தமிழ்நாட்டில், எதிர்காலத் தேர்தல் சவால்களுக்கு முன்னதாக தவெக-வின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
செங்கோட்டையன் என்ன பேசினார்?
செங்கோட்டையன் பேசியதாவது : “பெரியார் பிறந்த மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இங்கு வருகை தந்திருக்கிறார். இங்கு கடலென கூடி இருக்கிற கூட்டத்தை பார்க்கும்போது, நாளைய தமிழகம் என்கிற வரலாற்றை படைக்கக்கூடிய கூட்டமாக இதை பார்க்கிறேன். எப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என பல பேர் கனவு காண்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சி தளபதி தான்.
நம்முடைய தலைவர், மனிதநேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏனென்றால், ஒரு ஆண்டுக்கு 500 கோடி வருவாயை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறார். அன்று புரட்சி தலைவரை பார்த்தேன், இன்று புரட்சி தளபதியை பார்க்கிறேன். என்னை பொருத்தவரை இது தீர்ப்பளிக்கிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்பது போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறீர்கள். 234 தொகுதியிலும் வெல்வோம் என சூளுரைத்து தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார் செங்கோட்டையன்.

