- Home
- Tamil Nadu News
- ஈரோடு
- விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
நடிகர் விஜய் பெரிய ஆளாக வருவார் என அவர் சினிமாவி்ல் நடிக்கும் முன்னரே கணித்து சொல்லியதோடு, விஜய்க்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் தொடங்கியதும் மோகன்ராஜ் தான். அதைப்பற்றி பார்க்கலாம்.

Thalapathy Vijay Love Towards Erode
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தில் பிசியாக இருக்கிறார். அண்மையில் ஈரோட்டில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்தார் விஜய். இந்தக் கூட்டத்தில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திமுக-வை தீயசக்தி என விஜய் கூறியதால் அக்கட்சியினர் கொந்தளித்து வருகிறார்கள். இப்படி ஈரோட்டில் விஜய் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்திருப்பதற்கு முக்கிய காரணம் செங்கோட்டையன் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் அவரைவிட விஜய்க்கு நெருக்கமான நபர் ஒருவர் இருக்கிறார்.
யார் இந்த மோகன்ராஜ்?
அந்த நபரின் பெயர் மோகன் ராஜ். அவர் ஈரோடு விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். நடிகர் விஜய்க்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் ஈரோட்டில் தான். இதனால் ஈரோடு மீது விஜய்க்கு தனி பிரியம் இருக்கிறது. இதை விஜய்யே 28 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார். தனக்கு ஈரோடு என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது ஈரோடு மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் மோகன்ராஜ் தான் என்று பேசி இருந்தார்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
அந்த மோகன்ராஜ் பற்றி ஒரு குட்டி ஸ்டோரியும் கூறி இருந்தார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்று கேள்விப்பட்டதும் மோகன்ராஜ், தளபதியிடம் சென்று, ஈரோட்டில் உங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கப்போகிறோம் என சொன்னாராம். அதைக்கேட்டதும் விஜய்க்கு அன்று சிரிப்பு தான் வந்ததாம். நான் இன்னும் படத்துலயே நடிக்கல அதற்குள் என்ன ரசிகர் மன்றம் வைக்குறீங்க என விஜய் கேட்டிருக்கிறார். உங்களை பார்க்கும் போது நீங்க பெரிய நடிகரா வருவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால இப்பவே ரசிகர் மன்றம் வைக்கணும் என சொன்னாராம்.
விஜய் மனதில் இடம்பிடித்த மோகன்ராஜ்
தனக்கு நிறைய ரசிகர் மன்றம் இருந்தாலும் ஈரோடு ரசிகர் மன்றத்தை தன்னால் என்றென்றும் மறக்க முடியாது என விஜய் கூறி இருந்தார். 28 நாட்களுக்கு முன்பு இருந்ததைப் போல் தற்போதும் விஜய்யின் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் மோகன்ராஜ். அதை ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்வில் நடந்த ஒரு தருணமே சாட்சி. அந்த நிகழ்வின் முடிவில் செங்கோட்டையன் விஜய்க்கு ஒரு செங்கோலை பரிசாக வழங்கினார். அப்போது விஜய் அழைத்த ஒரு பெயர் தான் மோகன்ராஜ். அவரையும் அருகில் நிற்க வைத்து அந்த செங்கோலை வாங்கிக்கொண்டார் விஜய்.

