தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இந்திய அரசியலின் நட்சத்திரம் ஸ்டாலின் என்றும், பழைய மற்றும் புதிய எதிரிகளுக்கு சவாலானவர் என்றும் ரஜினி குறிப்பிட்டார்.

இந்திய அரசியலில் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டும், புதிய, பழைய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருந்து கொண்டும், “வாங்க 2026ல் பார்க்கலாம்” என தனக்கே உரிய புன்னகையோடு செயல்பட்டு வருகிறார் என் நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதிகாசங்கள், புராணங்களில் அதிசய மனிதர்கள் தொடர்பாக நான் படித்துள்ளேன். ஆனால், என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. 50 வருடத்தில் பல பரிமாணங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். இளையராஜாவின் உலகம் வேறு. நம் உலகம் வேறு.

உலகத்தில் வாழும் இந்தியர்களின் நாடி, நரம்பு, ரத்தங்களில் ஊறியுள்ளது இளையராஜாவின் இசை. 1600 படங்களில் 8000க்கும் அதிகமான பாடல்கள், 50 வருடங்கள் இது சாதாரண விஷயம் இல்லை. 80 களில் வெளியிடப்பட்ட அவரது பாடல் இப்போது சில படங்களில் ஹிட் ஆகிறது.

கமல், ரஜினி, விஜயகாந்த், ராமராஜன், முரளி, மோகன என எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்தவர் இளையராஜா. ஒரே மாதிரி தான் போடுவதாக சொல்வார். ஆனால் கமலுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வார். இதை முதல்வர் முன்னிலையிலும் பதிவு செய்கிறேன்.