தமிழகத்தில் தற்போது வரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். 12.5% வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை. என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட. SIR-யை எதிர்க்க கூடிய முதலமைச்சர் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்
‘‘தமிழகத்தில் தற்போது வரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். 12.5% வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை. என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட. SIR-யை எதிர்க்க கூடிய முதலமைச்சர் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்’’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘‘எஸ்ஐஆரை பொறுத்தவரை பேஸ் ஒன் தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்கள் டிசம்பர் 14ஆம் தேதி வரை நீடித்துள்ளார்கள். அதுவரை நமது எலிமினேஷன் ஃபார்ம் கொடுக்கலாம். ஏற்கனவே பாரதியார் ஜனதா கட்சி நாங்கள் சொன்னது தான். 80 லட்சத்திற்கு மேல் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் குறைந்தபட்சம் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தோம். இன்று தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள டாக்குமெண்ட் படி 77 லட்சம் பேரை நீக்கி இருக்கிறார்கள். வரைவு பட்டியலுக்கு முன்னால் தினமும் கொடுக்கப்படும் பிரஸ் நோட் அடிப்படையில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
6 கோடி 40 லட்சம் வாக்காளர்களில் எஸ்ஐஆருக்கு இன்றைக்கு வரை வாக்காளர்கள் இறப்பு, குடிபெயர்தல், கண்டுபிடிக்க முடியவில்லை என இதர காரணங்களால் 77 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இது தமிழகத்தில் 12.5 சதவிகிதம் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது ஒரு விதத்தில் ஆச்சரியம் மட்டுமல்ல பெரிய அதிர்ச்சியும் கூட. அப்படி என்றால் இந்த பட்டியலை வைத்து தான் நாம் மக்களவைத் தேர்தலை சந்தித்திருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலை இந்த வாக்காளர் பட்டியலை வைத்து தான் சந்தித்து இருக்கிறோம். 12.5% வாக்காளர்கள் இல்லை. 14 டிசம்பர் இந்த தேர்தல் பட்டியல் திருத்தத்திற்கு பின்னால் டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
அதை கண்ணும் கருத்துமாக நாம் பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் நீக்கப்பட்டால் 5.5 கோடிக்கு வந்து விடுவார்கள். இதையும் கூட தமிழக அரசின் கவனத்திற்கு நாங்கள் ஒரு அரசியல் கட்சியாக கொண்டு வருகிறோம். எந்த அளவுக்கு வாக்காளர் பட்டியல் 2024ல் சரிபார்த்தார்கள், 2023ல் சரிபார்த்தார்கள், 2022ல் சரிபார்த்தார்கள் எல்லா வருஷமும் சரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இந்த எஸ்ஐஆரில் 77 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். எஸ்ஐஆரைஎதிர்க்கிறேன் என்று முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

100 பேர் வாக்காளர்களாக இருக்கக்கூடிய விகிதத்தில் 12.5 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள் என்றால் இந்த 2024 எஸ்ஐ ஆரில் பெரிய தவறு நடந்திருக்கிறது. அது இன்று எஸ்ஐஆர் மூலம் சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே நிச்சயமாக இது எஸ்ஐஆரின் முதல் கட்ட வெற்றி தான். அடுத்து நடக்கக்கூடிய இரண்டாவது பேஸ் 19 டிசம்பர் டிசம்பரில் இருந்து ஜனவரி 19 வரைக்கும் நீக்கப்பட்டவர்கள், தெரியாமல் நீக்கப்பட்டார்கள் அல்லது தெரிந்தும் இருக்கிறவர்கள், எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் அதையும் கூட பாரதிய ஜனதா கட்சி கம்பீரமாக எடுத்து அதையும் பெற கவனத்திற்கு கொண்டு வருவோம். 2026 தேர்தலில் பொறுத்தவரை சுத்தமான நியாயமான ஒரு தேர்தலாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

