- Home
- Tamil Nadu News
- தூய்மை பணியாளர்களுக்கு கொத்து கொத்தாக புதிய அறிவிப்பு .! அமைச்சரவையில் அதிரடி முடிவு
தூய்மை பணியாளர்களுக்கு கொத்து கொத்தாக புதிய அறிவிப்பு .! அமைச்சரவையில் அதிரடி முடிவு
சென்னையில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்- அமைச்சரவைமுடிவு
சென்னையில் ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று இரவு தூய்மை பணியாளர்களை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து அகற்றினர்.
தற்போது சமூக நல கூடங்களில் தூய்மை பணியாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்
அதில் குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்காக 6 புதிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,
அறிவிப்பு 1
தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது நுரையீரல் , தோல் சார்ந்த நோய் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் . எனவே அது போன்ற தொழில்சார் நோய்களை கண்டறியவும் , சிகிச்சை அளிக்கவும் தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
அறிவிப்பு 2
தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் நலவாரியம் மூலம் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அவற்றுடன் கூடுதலாக 5 லட்சம் இலவச காப்பீடு செய்யப்படும். எனவே தூய்மை பணியாளர்கள் பணியின்போது உயரிழந்தால் இனி ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு
அறிவிப்பு 3
தூய்மை பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த சுய தொழில் தொடங்கும்போது தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3.50 லட்சம் ரூ. வரையிலோ மானியம் வழங்கப்படும். கடனை அவர்கள் முறையாக திருப்பி செலுத்தினால் 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்காக ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு.
அறிவிப்பு 4
.தூய்மை பணியாளர் குழந்தக்களுக்கு உயர் கல்வி கட்டணச் சலுகை மட்டுமின்றி , விடுதி , புத்தக கட்டணமும் வழங்கும் வகையில் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
அறிவிப்பு 5
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டில் நல வாரிய உதவியுடன் வீட்டு வசதி வாரியம் , நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டங்கள் மூலம் வசிப்பிடத்திலேயே வீடு கட்டித் தரப்படும். மொத்தம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித்தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு கனவு இல்லம்
அறிவிப்பு 6
நகர்ப்புறங்களில் அதிகாலையில் பணிக்கு செல்வதால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலை உணவு இலவசமாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். முதல் கட்டமாக சென்னையில் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர் பணிகளுக்கு திரும்ப வேண்டும் .பணி நிரந்தம் குறித்த வழக்குகளின் முடிவுகளை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மயம் என்பது ஏற்கனவே மற்ற மண்டலங்களில் உள்ள நடைமுறைதான். மற்ற கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் , தொழிலாளர் தீர்ப்பாயத்தின் வழக்கு முடிவுகளை பொறுத்து தீர்மானிக்கப்படும். தூய்மைப் பணியாளர்களுடன் 12 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசு இப்போதும் பேச்சுவார்த்தை க்கு தயாராக உள்ளது
நீதிமன்ற தீர்ப்பால் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டனர் , பலவந்தமாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார்.