MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சீட்டிங் பண்ணிய சிந்தாமணி... விஜயாவுக்கு விதிக்கப்பட்ட கெடு - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்

சீட்டிங் பண்ணிய சிந்தாமணி... விஜயாவுக்கு விதிக்கப்பட்ட கெடு - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தன்னை ஏமாற்றிய உண்மையை அறிந்து விஜயா கடும் கோபம் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2026, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சிந்தாமணி சரியான நேரம் பார்த்து விஜயாவை பழிவாங்கி இருக்கிறார். மனோஜும், விஜயாவும் சேர்ந்து ஃபிராடுத்தனம் பண்ணி அண்ணாமலையோட கையெழுத்தை பத்திரத்தில் போட்டு, வீட்டை அடமானம், வைத்து கடன் வாங்கி இருப்பதாக பிரச்சனை வெடித்துள்ள நிலையில், இது எல்லாத்துக்கும் காரணம் மனோஜும், விஜயாவும் தான் என சொல்லிவிடுகிறார்கள். எங்களுக்கு எதுவுமே தெரியாது என சிந்தாமணியும், பைனான்சியரும் ஒரு நாடகத்தை போட்டுவிடுகிறார்கள். தற்போது விஜயாவும், மனோஜும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

25
விஜயாவை அடிவெளுக்கும் அண்ணாமலை
Image Credit : jiohotstar

விஜயாவை அடிவெளுக்கும் அண்ணாமலை

ஆல்ரெடி அண்ணாமலை மனோஜை போட்டு பொளந்துகட்டிய நிலையில், தற்போது விஜயாவுக்கும் தர்ம அடி கொடுக்கிறார். அந்த பைனான்சியர் தனக்கு வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்றால் வீட்டை ஏலம் விடப்போவதாக சொல்கிறார். எப்படி ஏலத்துக்கு விடுவீங்க, என்னோட கையெழுத்தே இல்லை. இவன் தான் போட்டிருக்கான்னு சொல்கிறார் அண்ணாமலை. உடனே அவர், போலீசை வர வைத்து அரெஸ்ட் பண்ண சொல்லவா என கேட்கிறார். அதற்கு அண்ணாமலை கொஞ்ச டைம் கொடுங்க, நாங்க பணத்தை கொடுத்துவிடுகிறோம் என கேட்கிறார். அதற்கு அவர் அதெல்லாம் முடியாது என உடனடியாக பணம் வேண்டும் என சொல்கிறார்.

Related Articles

Related image1
முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Related image2
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
35
3 மாதம் டைம்
Image Credit : jiohotstar

3 மாதம் டைம்

பின்னர் அவரிடம் கெஞ்சி கேட்கும் அண்ணாமலை எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்க, நான் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணி கொடுக்கிறேன் என கேட்கிறார். அதற்காக நான் கையெழுத்து வேண்டுமானாலும் போட்டு கொடுக்கிறேன் என சொல்லிப்பார்க்கிறார். அதற்கு அந்த பைனான்சியர், முடியவே முடியாது, ஒரு மாசம் வேணா தர்றேன் என சொல்கிறார். பின்னர் ஒருவழியாக பேசி மூன்று மாதம் டைம் வாங்குகிறார் அண்ணாமலை. 3 மாதத்திற்குள் 45 லட்சம் கொடுக்க வேண்டும் என சொல்லும் அவர் சாட்சி கையெழுத்து கேட்க, முத்துவும் மீனாவும் சாட்சி கையெழுத்து போடுகிறார்கள்.

45
விஜயாவை ஏமாற்றிய சிந்தாமணி
Image Credit : jiohotstar

விஜயாவை ஏமாற்றிய சிந்தாமணி

3 மாசத்துக்கு மேல ஒரு நாள் தாண்டினாலும் நாங்க இந்த வீட்டை ஏலத்துல விட்ருவோம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் பைனான்சியர். இதையடுத்து சிந்தாமணி விஜயாவிடம் தனியாக சென்று பேசுகிறார். இப்படி என்னை காலைவாரிவிட்டு என்னை ஏமாத்திட்டியே என சிந்தாமணியை பார்த்து விஜயா கேட்க, நான் ஒன்னும் ஏமாத்தல, நீ தான் பொய் சொல்லி உன்னுடைய வீட்டாரை ஏமாத்திருக்க என நக்கலாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் சிந்தாமணி. இதற்கு அப்புறமாவது விஜயா திருந்துவாரா என்று தெரியவில்லை. சிந்தாமணியின் சுயரூபம் தெரிந்தும் அவருடன் பழக வாய்ப்பு உள்ளது.

55
முத்து மீனா டிஸ்கசன்
Image Credit : jiohotstar

முத்து மீனா டிஸ்கசன்

பின்னர் ரூமுக்குள் சென்று அண்ணாமலையை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் விஜயா. ஆனால் அண்ணாமலை அவரிடம் பேச மறுக்கிறார். மறுபுறம் முத்துவும், மீனாவும், எப்படி 45 லட்சத்தை 3 மாசத்துல புரட்ட முடியும், நாம ஒரு வருஷமா மேல ரூம் கட்ட பணத்தை புரட்ட முயற்சிக்கிறோம். அதுவே முடியல, மூணு மாசத்துல எப்படி 45 லட்ச ரூபாயை சேர்க்க முடியும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Recommended image3
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Recommended image2
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved