MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை

முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் ஆள் சிக்கியதை அடுத்து, அவர் மீது போலீசில் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளி இருக்கிறார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 22 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா அண்ணாமலையிடம் பொய் சொன்னது பற்றி மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கும் முத்து, ஹரிணி ரோகினியின் காதல் உண்மையானது என்று சொன்னதை சுட்டிக்காட்டுகிறார். ஹரிணி கூட ஒரு காதலை புரிந்து கொண்டிருக்கிறார் ஆனால் நீ தான் புரிந்து கொள்ளவில்லை என முத்து சொல்ல, நான் என்ன புரிஞ்சுக்கல என கேட்கிறார் மீனா. சத்யா ரேகாவின் காதலை நீ புரிந்து கொள்ளவில்லை என சொல்கிறார் முத்து. அதற்கு மீனா நான் அவனின் நல்லதுக்காக தான் பேசுகிறேன் என சொல்கிறார். அவர்களை சேர்த்து வைத்தால் சிந்தாமணி நிச்சயம் பிரச்சனை பண்ணுவார் என பயப்படுகிறார் மீனா.

25
சத்யா - ரேகாவிடம் பேசிய முத்து
Image Credit : jiohotstar

சத்யா - ரேகாவிடம் பேசிய முத்து

இதையடுத்து முத்து கிளம்பி கார் செட்டிற்கு செல்ல அங்கு சத்யாவும் ரேகாவும் வருகிறார்கள். அப்போது ரேகா தான் ஹைதராபாத் செல்ல உள்ள விஷயத்தை சொல்கிறார். அது மட்டும் இன்றி சத்யாவின் அம்மாவிற்கு தங்களுடைய காதல் விவகாரம் தெரிய வந்த விஷயத்தையும் கூறுகிறார். எல்லாம் உங்க அக்காவால்தான் என சொல்லும் முத்து, உங்கம்மா சிந்தாமணிக்கு நீங்க காதலிக்கும் விஷயம் தெரியாது தான என கேட்கிறார் முத்து. அது மட்டும் இன்றி நீயும் சத்யாவும் உங்கள் காதலில் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார் முத்து. அதற்கு இருவரும் நாங்கள் ஒருபோதும் பிரிய மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

Related Articles

Related image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
35
மீனாவின் எதிர்ப்பு
Image Credit : jiohotstar

மீனாவின் எதிர்ப்பு

இதையடுத்து வீட்டுக்கு வரும் முத்து மீனாவிடம் ரேகா ஹைதராபாத் செல்லும் விஷயம் உனக்கு தெரியுமா என கேட்க, அவரும் எனக்குத் தெரியும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி அவர் ஹைதராபாத் செய்வது ஏதோ உள்குத்து இருப்பதாகவும் சந்தேகப்படுகிறார் மீனா. எத்தனை நாட்கள் சென்னையில் இருந்தவரை ஏன் திடீரென ஹைதராபாத் அனுப்ப வேண்டும். அனேகமாக அவரின் பெற்றோருக்கு அவர்களின் காதல் விவகாரம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் மீனா. ஆனால் முத்து அதெல்லாம் இருக்காது அப்படி தெரிந்திருந்தால் இந்நேரம் அந்த சிந்தாமணி பிரச்சனை பண்ணாமல் இருந்திருப்பார் என கேட்கிறார்.

45
முத்துவிடம் சிக்கிய ரவுடி
Image Credit : jiohotstar

முத்துவிடம் சிக்கிய ரவுடி

இதன் பின்னர் சவாரி ஒன்றுக்குச் செல்லும் முத்து அந்த ஏரியாவில் ரவுடி ஒருவரை பார்க்கிறார். இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என யோசிக்கையில், இவன்தான் மீனாவை கத்தியால் குத்தியவன் என்று முத்துவுக்கு ஞாபகம் வருகிறது. பின்னர் அவனை துரத்தி சென்று பிடிக்கும் முத்து, யார் சொல்லி நீ மீனாவை கத்தியால் குத்துன என கேட்கிறார். முதலில் அந்த நபர் உண்மையை கூற மறுக்க பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுக்கும் முத்து சொல்லலைன்னா உன்ன அடிச்சேன் கொன்றுவேன் என்று மிரட்டிய பின்னர் வேறு வழியின்றி உண்மையை சொல்லி விடுகிறார். சிந்தாமணி தான் தன்னை கத்தியால் குத்த சொன்னதாக கூறுகிறார்.

55
கைதான சிந்தாமணி
Image Credit : jiohotstar

கைதான சிந்தாமணி

இதையடுத்து அந்த நபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று ஒப்படைக்கும் முத்து சிந்தாமணி மீது புகார் கொடுக்கிறார். உடனடியாக சிந்தாமணி வீட்டுக்குச் செல்லும் போலீஸ், மீனாவை கத்தியால் குத்திய நபர் நீங்கள் சொல்லி தான் அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததால் உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் எனக் கூறுகிறார். இதைக் கேட்ட சிந்தாமணி நான் அதெல்லாம் பண்ணவில்லை அந்த முத்து வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறான் என்று சொல்ல, அதெல்லாம் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்க எனக்கூறி சிந்தாமணியை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved