MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக விஜயா சொன்ன பொய் அமபலமாகி உள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 21 2026, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜுக்கு விரைவில் டைவர்ஸ் கிடைத்துவிடும் என பொய் சொல்லி, ஹரிணி என்கிற பணக்கார வீட்டு பெண்ணுடன் மனோஜுக்கு நிச்சயம் செய்துள்ளார் விஜயா. இதை அறிந்த ரோகிணி, ஹரிணியை தன்னுடைய பியூட்டி பார்லருக்கு வர வைத்து எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பான ஹரிணி, தன்னுடைய பெற்றோரிடம் உண்மையை போட்டுடைத்துள்ளார். பின்னர் ஹரிணியின் ஃபேமிலி விஜயா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஹரிணியை பிரையின் வாஷ் பண்ணிய ரோகிணி
Image Credit : jiohotstar

ஹரிணியை பிரையின் வாஷ் பண்ணிய ரோகிணி

ஹரிணியும், அவரின் குடும்பத்தாரும், விஜயாவை பார்த்து, இவங்க சீட்டிங் பண்ணிட்டாங்க. இவ்வளவு பொய் சொல்லிருக்காங்க என சொல்கிறார்கள். அப்போது தான் ரோகிணியை சந்தித்த விஷயத்தை சொல்கிறார் ஹரிணி. ரோகிணி தன்னிடம் என்னவெல்லாம் சொன்னார் என்பதை ஒரு குட்டி பிளாஷ்பேக்காக சொல்கிறார் ஹரிணி. அப்போது ஹரிணியிடம் கண்ணீர்விட்டு பேசும் ரோகிணி, தான் மனோஜை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அவங்க என்னைய ஏமாத்திட்டாங்க என எக்ஸ்ட்ரா ரெண்டு பிட்ட, சேர்த்துப் போட்டு சொல்கிறார். அவர் அழுதுகிட்டே சொன்னதால் ஹரிணியும் அதை உண்மை என நம்பிவிடுகிறார்.

Related Articles

Related image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
மீனாவுக்கு சிந்தாமணி வைத்த செக் மேட்... விஜயாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்
35
உண்மையை உடைக்கும் ஹரிணியின் பெற்றோர்
Image Credit : jiohotstar

உண்மையை உடைக்கும் ஹரிணியின் பெற்றோர்

கண்டிப்பா உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்காது. ரோகிணி டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ரோகிணி தான் உங்களுக்கு கரெக்டா இருக்கும். அவ உங்களை அந்த அளவுக்கு காதலிக்குறா என மனோஜிடம் சொல்கிறார். அப்போது விஜயா, அதெல்லாம் இல்ல, ரோகிணி சொன்னதெல்லாம் பொய் என சொல்லி சப்பைகட்டு கட்டப்பார்க்கிறார். ஆனால் அதற்கெல்லாம் மசியாத ஹரிணியின் பெற்றோர். இப்படி ஏமாத்திட்டீங்களே. 6 மாசம் டைவர்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை. அதுவரை ரோகிணிக்கு 25 ஆயிரம் மாச மாசம் கொடுக்கணும்னு கோர்ட் ஆர்டர் போட்டிருக்கும் விஷயத்தை சொல்கிறார்.

45
விஜயாவை அடிக்க பாய்ந்த அண்ணாமலை
Image Credit : jiohotstar

விஜயாவை அடிக்க பாய்ந்த அண்ணாமலை

நாங்க கோர்ட் ஆர்டர் காப்பியெல்லாம் பாத்துட்டு தான் இங்க வர்றோம் என சொல்கிறார். நீங்களும் இப்படி இவங்களோடு சேர்ந்து பொய் சொல்றீங்களே என அண்ணாமலையை அவர்கள் திட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அண்ணாமலைக்கு செம கோபம் வருகிறது. நான் இதுவரைக்கும் யாரிடமும் பொய் சொன்னதே இல்ல, என்னைய பொய் சொன்னேன்னு யாரும் சொன்னதே இல்ல. ஆனா பாரு, உன்னையால இப்போ என்னைய ஹரிணியோட அப்பா பொய் சொல்றேன்னு சொல்லிட்டு போயிட்டாரு. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா என கேட்டு விஜயாவை அடிக்க பாய்கிறார் அண்ணாமலை.

55
ஃபீல் பண்ணும் முத்து
Image Credit : jiohotstar

ஃபீல் பண்ணும் முத்து

அப்போது அங்கிருந்த முத்து, மீனா ஆகியோர் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். இந்த பிரச்சனையெல்லாம் முடிந்த பிறகு முத்துவும், மீனாவும் தனியா போய் இதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். ஹரிணியும், இவனும் சேர மாட்டாங்கனு எனக்கு ஏற்கனவே தெரியும். ஹரிணி ரொம்ப நல்ல பொண்ணா இருக்கு. ஆனா இவன் பாரு எப்படி இருக்கான்னு மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன ஆனது? மனோஜின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பதையெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
மீனாவுக்கு சிந்தாமணி வைத்த செக் மேட்... விஜயாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved