MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஈஸ்வரியை தூண்டிவிட்டு அவர் மூலம் ஜனனியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2026, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிர் உடன் சண்டைபோட்ட ஜனனி, வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அவர் மதிவதினியிடம் சென்று ஆதி குணசேகரனை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசியதை தன்னுடைய ரகசிய கேமராவில் படம்பிடித்த ராவணன், அதனை ஆதி குணசேகரனுக்கு அனுப்பி விட்டிருக்கிறார். அதைப்பார்த்த குணசேகரன், அந்த வீடியோவை ஈஸ்வரியிடம் காட்டி, இவ நம்ம குடும்பத்தை நல்லாவே இருக்க விடமாட்டாம்மா என பேசி டிராமா போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஜனனியை அழைத்துவர சொல்லும் ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

ஜனனியை அழைத்துவர சொல்லும் ஈஸ்வரி

அந்த வீடியோவை பார்த்ததும் அதிரடி முடிவெடுக்கும் ஈஸ்வரி ஜனனியை வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால் ஜனனி, அவருக்கு பதிலாக சக்தியை அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சக்தி வந்ததும், அவரிடம் அந்த வீடியோவை காட்டுகிறார்கள். அதைப்பார்த்த சக்தி இது எப்படி லீக் ஆச்சு என ஷாக் ஆனது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதில் ஜனனி எதுவும் தப்பா பேசலையே என சப்போர்ட் பண்ணுகிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, சக்தி ஜனனி இப்போ இந்த வீட்டுக்கு வரணும் என ஆர்டர் போடுகிறார். இதனால் வேறு வழியின்றி ஜனனியை அழைத்துவர செல்கிறார் சக்தி.

Related Articles

Related image1
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
35
வீட்டுக்கு வர மறுக்கும் ஜனனி
Image Credit : youtube/suntv

வீட்டுக்கு வர மறுக்கும் ஜனனி

பின்னர் ஜனனியிடம் சென்று விஷயத்தை சொல்லும் சக்தி, இதெல்லாம் எப்படி லீக் ஆச்சு என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீ இப்போ பேசுனது மட்டுமில்ல, ஏற்கனவே நீ மதிவதினி மேடம் கிட்ட பேசுன ஆடியோவும் வெளிய வந்திருக்கு என சக்தி சொல்ல, இதெல்லாம் யார் செய்யும் வேலை என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் ஜனனி. அதுமட்டுமின்றி நீ இப்போ அங்க போனா பிரச்சனை தான் பெரிதாகும், அதனால் இப்போதைக்கு அந்த வீட்டுக்கு நீ செல்ல வேண்டாம் என்று கூறும் சக்தி, ஈஸ்வரிக்கும் போன் போட்டு, ஜனனி இப்போ வரலேன்னு சொல்லிட்டா அண்ணி என சொல்லிவிடுகிறார்.

45
ஜனனியை அழிக்க திட்டமிடும் குணசேகரன்
Image Credit : youtube/suntv

ஜனனியை அழிக்க திட்டமிடும் குணசேகரன்

மறுபுறம் தன்னுடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை தனியாக அழைத்து பேசும் ஆதி குணசேகரன். ஜனனியை வீட்டை விட்டு துரத்திவிடனும்னு நினைக்காதீங். இங்க வச்சே அவளை பந்தாடணும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி ஈஸ்வரியை தற்போது தன் பக்கம் இழுத்துள்ள அவர், ஈஸ்வரி தனக்கு சப்போர்டாக இருப்பார் என்கிற மிதப்பில் அவரை வைத்தே ஜனனியை பழிவாங்கவும் முடிவெடுத்துள்ளார். இதுதான் சரியான நேரம், அவளை இதோடு முடிச்சுவிட்றுங்க என தன் தம்பிகளிடம் சொல்கிறார். இதனால் ஜனனிக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

55
ட்விஸ்ட் என்ன?
Image Credit : youtube/suntv

ட்விஸ்ட் என்ன?

வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆதி குணசேகரன் ஏதோ கேம் ஆடுகிறார் என்பது மட்டும் ஜனனிக்கு தெரிகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் கேமரா இருக்கும் விஷயத்தை மதிவதினியிடம் ஜனனி சொல்வாரா? ஈஸ்வரியிடம் உண்மையை கூறி ஆதி குணசேகரனின் மாஸ்டர் பிளானை உடைப்பாரா ஜனனி? அல்லது ஈஸ்வரி ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு ஜனனியை பழிவாங்க உள்ளாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Recommended image2
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved