MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு ரூ. 4,00,000 ஊக்கத்தொகை! அதுமட்டுமல்ல! ரூ.3.25 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள்.!

விவசாயிகளுக்கு ரூ. 4,00,000 ஊக்கத்தொகை! அதுமட்டுமல்ல! ரூ.3.25 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள்.!

Green Tea Workers: தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை வழங்கிய 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 4,00,000 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 18 2026, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இண்ட்கோசர்வ் தேயிலை தொழிற்சாலை
Image Credit : Asianet News

இண்ட்கோசர்வ் தேயிலை தொழிற்சாலை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 09ம் தேதியன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது, நீலகிரி மாவட்டத்தில் இண்ட்கோசர்வ் கீழ் செயல்பட்டு வரும் 16 தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக பசுந்தேயிலை வழங்கும் சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

25
4,00,000 மதிப்பிலான காசோலைகள்
Image Credit : our own

4,00,000 மதிப்பிலான காசோலைகள்

அதன்படி நேற்று தலைமைச் செயலகத்தில், தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை வழங்கிய 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 4,00,000 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

Related Articles

Related image1
சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
Related image2
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?
35
தேயிலை விவசாயிகள்
Image Credit : Asianet News

தேயிலை விவசாயிகள்

 இண்ட்கோசர்வ் தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான கருவிகளை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் வகையில் ரூ.3.25 கோடி மதிப்பில் 1500 பசுந்தேயிலை சேகரிக்கும் கருவிகள் (Green Leaf Harvester), 180 மின் தெளிப்பான்கள் (Battery Operated Sprayer) 160 புதர்களை அகற்றும் கருவிகள் (Hedge Trimmer) அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

45
பசுந்தேயிலை அறுவடை இயந்திரம்
Image Credit : Asianet News

பசுந்தேயிலை அறுவடை இயந்திரம்

தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகைகள்

நீலகிரி மாவட்டத்திலுள்ள 16 இண்ட்கோசர்வ் தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள 27,000 சிறு தேயிலை விவசாயிகளிடமிருந்து 5 ஆண்டு காலத்தில் 2,17,236 மெட்ரிக்டன் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 352.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கு கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.8.51 கோடி கூடுதல் ஆதார விலையாக தேயிலை வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பசுந்தேயிலை அறுவடை இயந்திரம்

2023-24 ஆம் ஆண்டு ரூ.2.48 கோடி மானியத்தில் 1000 பசுந்தேயிலை அறுவடை இயந்திரங்கள் சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

55
தொழிற்சாலைகளின் புனரமைப்பு
Image Credit : Asianet News

தொழிற்சாலைகளின் புனரமைப்பு

15 இண்ட்கோசர்வ் தொழிற்சாலைகளில் ரூ.67.74 கோடி மதிப்பில் நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டு, உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் 2,17,236 மெட்ரிக் டன் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, அதிலிருந்து 57,486 மெட்ரிக் டன் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த டீ தூள்கள் ரூ.559.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு தேயிலை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திட, 11,583 மெட்ரிக் டன் டீ தூள் இண்ட்கோசர்வ் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, ‘ஊட்டி டீ’ என்ற பெயரில் நியாயவிலைக் கடைகளில் ரூ. 253.06 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?
Recommended image2
Now Playing
செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
Recommended image3
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
Related Stories
Recommended image1
சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
Recommended image2
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved