MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?

குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?

Tomato And Onion Price: அனைத்து விதமாக சமையலுக்கும் தக்காளி, வெங்காயம் இரண்டும் பயன்படுத்தப்படுகிறது. எனவே தக்காளி, வெங்காயத்தின் விலை சரிந்திருந்தாலே போதும் கூடை, கூடையாக மக்கள் அள்ளி செல்வார்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 18 2026, 08:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையலுக்கு முக்கியம் தக்காளி, வெங்காயம்
Image Credit : our own

சமையலுக்கு முக்கியம் தக்காளி, வெங்காயம்

சமையலுக்கு ருசியை அள்ளி கொடுப்பதில் தக்காளி, வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் காய்கறிகளை விட மக்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்வார்கள். அனைத்து விதமாக சமையலுக்கும் தக்காளி, வெங்காயம் இரண்டும் பயன்படுத்தப்படுகிறது. எனவே தக்காளி, வெங்காயத்தின் விலை சரிந்திருந்தாலே போதும் கூடை, கூடையாக மக்கள் அள்ளி செல்வார்கள்.

25
போட்டு போடும் தக்காளி, வெங்காயம்
Image Credit : our own

போட்டு போடும் தக்காளி, வெங்காயம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. அதேபோல் வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்ததால் லாரி லாரியாக மூட்டையில் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கும் இடையே போட்டி போட்டு குறைந்து வருகிறது. தற்போது 4 முதல் 5 கிலோ வெங்காயம் ரூ.100க்கும், தக்காளியும் 5 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதால் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Related Articles

Related image1
வெயிலுக்கும், பனிக்கும் கொஞ்சம் பிரேக்! முதல் முறையாக பிப்ரவரியில் பிச்சு ஊதரப்போகும் கனமழை!
Related image2
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? பயணிகளுக்கு வெளியான குட்நியூஸ்!
35
காய்கறிகளின் விலை
Image Credit : Asianet News

காய்கறிகளின் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று பிப்ரவரி 18ம் தேதி காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி விலை என்ன என்பதை பார்ப்போம். பூண்டு ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும், டபுள் பீன்ஸ் 150 முதல் 180 ரூபாய்க்கும், கருணைக் கிழங்கு 15 முதல் 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 65 முதல் 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், பூசணி ஒரு 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கோவைக்காய் 25 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

45
 அவரைக்காய் முருங்கைக்காய் விலை உச்சம்
Image Credit : google

அவரைக்காய் முருங்கைக்காய் விலை உச்சம்

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 முதல் 13 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 41 முதல் 46 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
நெல்லிக்காய் புதிய உச்சம்
Image Credit : Asianet News

நெல்லிக்காய் புதிய உச்சம்

அதேபோல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 41 முதல் 46 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் 230 முதல் 290 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
வெங்காயம்
காய்கறி விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம் முதல் e-Scooter! ஓய்வூதியம் வரை! குஷியில் தொழிலாளர்கள்!
Recommended image2
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தேதி அறிவிப்பு..! தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல்
Recommended image3
விவசாயிகளுக்கு ரூ. 4,00,000 ஊக்கத்தொகை! அதுமட்டுமல்ல! ரூ.3.25 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள்.!
Related Stories
Recommended image1
வெயிலுக்கும், பனிக்கும் கொஞ்சம் பிரேக்! முதல் முறையாக பிப்ரவரியில் பிச்சு ஊதரப்போகும் கனமழை!
Recommended image2
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? பயணிகளுக்கு வெளியான குட்நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved