MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? பயணிகளுக்கு வெளியான குட்நியூஸ்!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? பயணிகளுக்கு வெளியான குட்நியூஸ்!

வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் தொடங்கும். மேலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 17 2026, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
Image Credit : our own

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் புறப்பட்டு வருகின்றன. தனியார் ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்படுகின்றன. இந்த 40 கிலோ மீட்டரை கடக்க சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகிறது.

25
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
Image Credit : our own

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்

இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கிளாம்பக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. எப்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Related image1
சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
Related image2
வெயிலுக்கும், பனிக்கும் கொஞ்சம் பிரேக்! முதல் முறையாக பிப்ரவரியில் பிச்சு ஊதரப்போகும் கனமழை!
35
எழும்பூர் ரயில் நிலையம்
Image Credit : our own

எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக நடைமேடை 10 மற்றும் 11ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வரும் 20 தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைமேடை 5 மற்றும் 6 இயக்கப்படும் என்றார். மேலும் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் விரைவு ரயிகள் இயக்கப்படும் நடைமேடை 6லிலும், செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நடைமேடை 5லிலும் இயக்கப்படும் என கூறினார்.

45
மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து
Image Credit : southern railway

மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து

தொடர்ந்து பேசிய அவர் ஞாயிற்றுக்கிழமை உட்பட இடைப்பட்ட பிப்ரவரி 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை தெற்கு ரயில்வேயில் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார். மின்சார ரயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. ரயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும்.

55
வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை
Image Credit : southern railway

வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை

புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரயில்கள் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் தொடங்கும். விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தென்னக இரயில்வே
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஸ்ரீரங்கம் தொகுதியை தாரை வார்க்கும் எடப்பாடி..! கொந்தளிக்கும் முத்தரையர்கள்..!
Recommended image2
தோழி விடுதிகளில் Wi-Fi முதல் சிசிடிவி கேமரா வரை! இவ்வளவு வசதிகள் இருக்கா! வாடகை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஸ்டாலினை எவனாவது ஏற்றுக் கொள்வானா..? மு.க.அழகிரி எடுத்த ஷாக் முடிவு... இன்ப அதிர்ச்சியில் அதிமுக..!
Related Stories
Recommended image1
சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
Recommended image2
வெயிலுக்கும், பனிக்கும் கொஞ்சம் பிரேக்! முதல் முறையாக பிப்ரவரியில் பிச்சு ஊதரப்போகும் கனமழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved