- Home
- Tamil Nadu News
- ஓயாமல் ஊத்தப்போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
ஓயாமல் ஊத்தப்போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
Heavy Rain Alert: கடும் பனிப்பொழிவுக்குப் பிறகு சென்னையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான பனிபொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். காலை 9 மணி வரையும், இரவு நேரத்திலும் வெளியில் செல்லாமல் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் மழை எச்சரிக்கை
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
லேசானது முதல் மிதமான மழை
அதேபோல் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் 18ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
மேலும் டிசம்பர் 19 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை. டிசம்பர் 18 முதல் 20 வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

