MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!

T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!

பிலிப்ஸ் வெறும் 25 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். சூப்பராக விளையாடிய செப்ஃபர்ட் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 08 2026, 07:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
T20 உலகக் கோப்பை 2026
Image Credit : x

T20 உலகக் கோப்பை 2026

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இன்று (பிப்ரவரி 8) சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

குல்பாடின் நயீப்பின் அபாரமான ஆட்டம் ஆப்கானிஸ்தானை 182 என்ற வலுவான ஸ்கோரை எட்டச் செய்தது. வெறும் 29 பந்துகளில் அரை சதம் அடித்த குல்பாடின் நயீப் 35 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணி வெற்றி

கடைசி கட்டத்தில் அடல் 24 பந்துகளில் 29 ரன்களும், தர்விஷ் ரசூல் 13 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து அணி 180 ரன்களை கடக்க வைத்தனர். பின்பு 183 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 13 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை வெற்றிகரமாக எட்டியது. ஆரம்பத்தில் தடுமாறினாலும், டிம் செப்ஃபர்ட்டின் நிதானமான அரைசதமும், கிளென் பிலிப்ஸின் அதிரடி ஆட்டமும் நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெறச் செய்தது.

பிலிப்ஸ் அதிரடி ஆட்டம்

பிலிப்ஸ் வெறும் 25 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். சூப்பராக விளையாடிய செப்ஃபர்ட் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். 

டேரில் மிட்செல் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி தனது அதிகப்பட்ச ஸ்கோரை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

கிளென் பிலிப்ஸ் புதிய சாதனை

இந்த போட்டியில் 42 ரன்கள் எடுத்ததன் மூலம், நியூசிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ், முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லமை முந்தி, நியூசிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

அதிரடி வீரர் பிலிப்ஸ் 89 டி20 போட்டிகளில் 31.57 சராசரி மற்றும் கிட்டத்தட்ட 142 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2147 ரன்கள் எடுத்துள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் 3,531 ரன்களுடன் முதலிடத்திலும், கேன் வில்லியம்சன் 2575 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தான் செய்வது நியாயமா? சூர்யகுமார் சொன்ன 'நச்' பதில்!
Recommended image2
T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved