- Home
- Sports
- Sports Cricket
- காதலிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி பஸ்ஸை காக்க வைத்த ஹர்திக் பாண்ட்யா? விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?
காதலிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி பஸ்ஸை காக்க வைத்த ஹர்திக் பாண்ட்யா? விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?
மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யாவின் காதலி மஹிகா ஷர்மா தாமதமாக வந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேருந்து தாமதமானது என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசம்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியண்ஸ் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்து ஒன்றில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கும், சீனியன் வீரர்களான ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும், அணியில் ஒற்றுமை இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பும்ராவை கண்டித்த பாண்ட்யா
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை படுமோசமான தோல்வியை சந்தித்த நிலையில், உலகின் டாப் பவுலர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவை, விக்கெட் எடுக்கவில்லை என்று ஹர்திக் பாண்டியா மைதானத்திலேயே கடிந்து கொண்டார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேப்டன் தன்னைக் கடிந்து கொண்டபோதும், ஜஸ்பிரித் பும்ரா அந்த வருத்தத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடனே காணப்பட்டார். இந்தச் செயல் சரியல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஹர்திக் பாண்ட்யாவின் காதலி மஹிகா ஷர்மா
இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யாவின் காதலி மஹிகா ஷர்மா தாமதமாக வந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேருந்து தாமதமானது என்று சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டு வைரலாகப் பரவியது. அதாவது போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் பஸ்ஸில் ஏற மஹிகா 20 நிமிடங்கள் தாமதமாக வந்த வீடியோ வைரலானது.
மஹிகா ஷர்மாவுக்காக காத்திருந்த மும்பை அணி
மஹிகா ஷர்மாவுக்காக மொத்த அணியும் பஸ்ஸில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தாமதமாக வந்ததால், அணி வீரர் ஒருவருக்கு உட்கார இடம் கூட இல்லை எனவும் தகவல்கள் பரவின. இதனால் ஒட்டுமொத்த மும்பை இந்தியனஸ் ரசிகர்களும் ஹர்திக் பாண்ட்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால் , நிலைமையை உற்று நோக்கினால், இந்தக் கூற்றுகள் தவறானவை என்பது தெரியவந்துள்ளது.
உண்மையில் நடந்தது என்ன?
அதாவது மஹிகா ஷர்மா ஏறியதாகக் காணப்பட்ட பேருந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வப் பேருந்து அல்ல. அது அது மும்பை அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனி வாகனம் ஆகும். ஆகவே மஹிகா ஷர்மாவுக்காக அணி வீரர்கள் காத்திருக்க வைக்கப்பட்டனர் என்ற கூற்றுக்கு முரணாக உள்ளது.
மேலும், வைரலான அந்த வீடியோவில் மஹிகாவிற்குப் பின்னால் இருக்கும் நபர் ஹர்திக் பாண்ட்யா எனத் தவறாக அடையாளம் காணப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்ட்யா அந்த நேரத்தில் அங்கிருந்ததற்கோ அல்லது அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததற்கோ எந்த உறுதிப்படுத்த தகவலும் இல்லை. ஆகவே மஹிகா ஷர்மா குறித்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்பது தெரியவந்துள்ளது.

