MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தான் செய்வது நியாயமா? சூர்யகுமார் சொன்ன 'நச்' பதில்!

T20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தான் செய்வது நியாயமா? சூர்யகுமார் சொன்ன 'நச்' பதில்!

T20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்துள்ள நிலையில், இது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 05 2026, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : Getty

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பையில் பிப்ரவரி 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து பிசிசிஐ உத்தரவுப்படி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீக்கியது.

இந்தியாவுடன் விளையாட மாட்டோம் பாகிஸ்தான்

இதனால் பொங்கியெழுந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டுமென்றே கூறி இலங்கையில் போட்டியை மாற்ற விரும்பியது. இதற்கு ஐசிசி மறுத்ததுடன் வங்கதேசத்தை டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கியது. 

வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலையில், தான் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமாரிடம் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

23
சூர்யகுமார் யாதவ் கருத்து
Image Credit : Getty

சூர்யகுமார் யாதவ் கருத்து

இதற்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், ''எங்களின் மனநிலை தெளிவாக உள்ளது. போட்டியை நாங்கள் விளையாட மறுக்கவில்லை. அது மறுபக்கத்தில் (பாகிஸ்தான்) இருந்து வந்துள்ளது. ஐசிசி அதிகாரப்பூர்வ அட்டவணையை தேர்வு செய்துள்ளது. போட்டியை நடத்த நடுநிலையான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

பிசிசிஐ மற்றும் நமது அரசு இதற்கு ஒத்துழைத்துள்ளது. நாங்கள் நிச்சயம் கொழும்பு செல்வோம். இப்போதைக்கு எங்களின் எண்ணம் முதல் போட்டியை (பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவுக்கு எதிராக) எதிர்கொள்வது தான். அதன்பிறகு கொழும்பு செல்வோம்'' என்றார்.

வாஷிங்டன் சுந்தர் காயம்

மேலும் இந்திய அணியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்வதில் அணி அவசரம் காட்டவில்லை என்று சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தினார்.

 ஜனவரி 11 அன்று வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தார் காயம் அடைந்தார். அவர் காயம் குணமாகவில்லை என கூறப்படுகிறது. மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!
Related image2
T20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் சிக்சர் மழை.. பவுலிங்கில் கலக்கிய அபிஷேக் சர்மா.. SA-வை வீழ்த்திய இந்தியா!
33
வாஷிங்டன் சுந்தருக்கு பதில் மாற்று வீரர் யார்?
Image Credit : X/Sundarwashi5

வாஷிங்டன் சுந்தருக்கு பதில் மாற்று வீரர் யார்?

இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், ''வாஷிங்டன் விஷயத்தில் நாங்கள் பொறுமையாக இருப்போம், மாற்று வீரரைத் தேர்வு செய்வதில் அவசரம் காட்ட விரும்பவில்லை'' என்று தெரிவித்தார். தொடர்ந்து சூர்யகுமார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரைப் பாராட்டியதோடு, அணியில் ஒரு நேர்மறையான மற்றும் வீரர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியதற்காக அவருக்குப் பெருமை சேர்த்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!
Recommended image2
T20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் சிக்சர் மழை.. பவுலிங்கில் கலக்கிய அபிஷேக் சர்மா.. SA-வை வீழ்த்திய இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved