MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!

T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!

T20 உலகக்கோப்பை எனும் கிரிக்கெட் திருவிழா பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்க உள்ளது. T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 03 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
2026 T20 உலகக்கோப்பை
Image Credit : Getty

2026 T20 உலகக்கோப்பை

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலக்கோப்பை பிப்ரவரி 7ம் தேதி (சனிக்கிழமை) முதல் மார்ச் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளன. 

இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து என 20 அணிகள் விளையாடுகின்றன.

24
இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடக்குமா?
Image Credit : Getty

இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. பிப்ரவரி 12ம் தேதி நமீபியாவுடன் டெல்லியில் மோதுகிறது. 

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த போட்டி நடக்குமா? இல்லையா? என்பது அந்த நாளின் தான் தெரியவரும்.

இந்திய அணி போட்டிகளின் அட்டவணை

இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 18ம் தேதி நெதர்லாந்துடன் அகமதாபாத்தில் மோதுகிறது. டி20 உலகக்கோப்பையில் குரூப் சுற்று போட்டிகள் பிப்ரவரி 7ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற உள்ளன. 

சூப்பர் 8 போட்டிகள் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரையும், அரையிறுதி போட்டிகள் மார்ச் 4ம் தேதி மற்றும் 5ம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதியும் நடைபெற உள்ளன.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் முடிவால் ரூ.2,200 கோடி இழப்பு.. தவிக்கும் ஐசிசி.. அடுத்து என்ன நடக்கும்?
Related image2
T20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்.. பாகிஸ்தான் அறிவிப்பு.. ஐசிசி வைக்கும் ஆப்பு!
34
எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
Image Credit : ANI

எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?

இப்போது டி20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்ப்போம்.

2026 டி20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்?

டி20 உலகக்கோப்பையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்த்து மகிழலாம். ஸ்போர்ட் ஸ்போர்ட் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.

2026 டி20 உலகக்கோப்பையை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

டி20 உலகக்கோப்பையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்த்து மகிழலாம்.

44
எத்தனை மணிக்கு தொடங்கும்?
Image Credit : Getty

எத்தனை மணிக்கு தொடங்கும்?

2026 டி20 உலகக்கோப்பையை போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்?

டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்பதால் குரூப் சுற்றுகளில் ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த வகையில் இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு ஒரு போட்டியும், மாலை 3 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 7 மணிக்கு தொடங்கும் ஒரு போட்டியும் நடைபெறும்.

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் முடிவால் ரூ.2,200 கோடி இழப்பு.. தவிக்கும் ஐசிசி.. அடுத்து என்ன நடக்கும்?
Recommended image2
T20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்.. பாகிஸ்தான் அறிவிப்பு.. ஐசிசி வைக்கும் ஆப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved