MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Washing Machine Cleaning Tips: வாஷிங் மெஷினில் துர்நாற்றம் வீசுகிறதா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் வாசனையாக்க சூப்பர் டிப்ஸ்

Washing Machine Cleaning Tips: வாஷிங் மெஷினில் துர்நாற்றம் வீசுகிறதா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் வாசனையாக்க சூப்பர் டிப்ஸ்

Washing Machine Cleaning Tips: வாஷிங் மெஷின்களில் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் துர்நாற்றத்தை, அதிக செலவின்றி வீட்டிலேயே எளிதாக சுத்தம் செய்து நறுமணமாக மாற்ற முடியும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 18 2026, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாஷிங் மெஷின்
Image Credit : Asianet News

வாஷிங் மெஷின்

தற்போதைய காலக்கட்டத்தில் வாஷிங் மெஷின் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. குறிப்பாக தினமும் வேலைக்கு செல்வர்கள் வாஷிங் மெஷின் இருந்து வருகிறது. எவ்வளவு துணியாக இருந்தாலும் எந்த அலைச்சல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் துணியை எளிதாக துவைக்க முடிகிறது. இந்நிலையில் வாஷிங் மெஷின் துணியை போட்டு எடுப்பதோடு சரி, அதை சரிவர சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விடுவோம். அதில் இருக்கும் ஈரப்பதத்தை துடைக்கவோ, சுத்தம் செய்யவோ மாட்டோம். இதனால் அதில் பயங்கரமாக துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

25
வாஷிங் மெஷினில் துர்நாற்றம்
Image Credit : Getty

வாஷிங் மெஷினில் துர்நாற்றம்

வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி என்று தெரியாமல் பல சர்வீஸ் சென்டரிலிருந்து ஆட்களை வரவழைத்து சரி செய்து பணத்தை செலவு செய்வார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கரைசல் ஒன்று தயாரித்து அதை வைத்து வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை ஈஸியாக போக்கிவிடலாம். அது குறித்து இந்த செய்தியில் விளக்கமாக பார்க்கலாம்.

Related Articles

Related image1
ஊரைவிட்டு வந்த அண்ணாச்சி... ஊரெல்லாம் சரவணா ஸ்டோர் உருவானது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
Related image2
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
35
வாஷிங் மெஷின் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?
Image Credit : Getty

வாஷிங் மெஷின் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

சூடான நீர் - 2 லிட்டர்

எலுமிச்சை தோல் - 4

பரிகாரம் - 1 துண்டு

கரைசல் தயாரிக்கும் முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதிக்கும் தண்ணீரில் நுணுக்கிய படிகாரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் எலுமிச்சை தோலையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்குவதற்கான கரைசல் தயார்.

45
பயன்படுத்துவது எப்படி?
Image Credit : Pinterest

பயன்படுத்துவது எப்படி?

முதலில் வாஷிங் மெஷினில் எந்த துணிகளும் இருக்கக் கூடாது. முழுமையாக காலியாக இருக்க வேண்டும். அடுத்ததாக தயாரித்து வைத்த கலவையை, வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்ட் ஊற்றும் இடத்தில் கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் கலவையை வாஷிங்மெஷினுக்குள் ஊற்றவும் 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு 15 நிமிடங்கள் வாஷிங் மெஷினை ஓட விடவும்.

55
 வாஷிங் மெஷினில் வாசனை வீசும்
Image Credit : gemini

வாஷிங் மெஷினில் வாசனை வீசும்

அடுத்து வாஷிங் மிஷினில் இருக்கும் தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விடுங்கள். பின் சுத்தமான தண்ணீரை ஊற்றி மீண்டும் ஒருமுறை வாஷிங் மெஷினை ஓட விடுங்கள். வாஷிங் மெஷின் இப்போது நன்றாக சுத்தமாகிவிடும். அடுத்ததாக ஒரு சுத்தமான துணியை கொண்டு வாஷிங்மெஷினில் ஒட்டி இருக்கும் ஈரத்தை துடைக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது வாஷிங் மெஷினில் துர்நாற்றம் நீங்கி நல்ல வாசனை வீசும். இனி உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினில் நாற்றம் வீசுகிறது என்று கவலைப்பட வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலை எழுந்தவுடன் படுக்கை மடிக்கிறீர்களா? உடனே நிறுத்துங்க!
Recommended image2
உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைக்கிறதா? ரத்த வகை முதல் ஆடை வரை.. ஆச்சரியமான காரணங்கள்!
Recommended image3
Cooling Chapati: கோடை காலத்தில் உடலை குளுகுளுவென வைக்கும் 5 வகை சப்பாத்திகள்.! செய்வது எப்படி? செய்முறை இதோ.!
Related Stories
Recommended image1
ஊரைவிட்டு வந்த அண்ணாச்சி... ஊரெல்லாம் சரவணா ஸ்டோர் உருவானது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
Recommended image2
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved