MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைக்கிறதா? ரத்த வகை முதல் ஆடை வரை.. ஆச்சரியமான காரணங்கள்!

உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைக்கிறதா? ரத்த வகை முதல் ஆடை வரை.. ஆச்சரியமான காரணங்கள்!

ஒரு குறிப்பிட்ட ரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் விரட்டி விரட்டிக் கடிக்கும். இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 17 2026, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
 கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையா?
Image Credit : AI

கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையா?

கோடைக்காலத்தில் உலகம் முழுக்கவே கொசு ஒரு பெரிய பிரச்னை. நாம எல்லாரும் கொசுத் தொல்லையை அனுபவிப்போம். ஆனா, சிலரை மட்டும் கொசுக்கள் ஏன் தேடித் தேடி கடிக்குது என்று எப்போதாவது யோசிச்சிருக்கீங்களா? சிலர் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க ஸ்பிரே, லோஷன் எல்லாம் பயன்படுத்துவார்கள். ஆனாலும் அவர்களால் கொசுக்கடியைத் தவிர்க்க முடியாது. இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் உள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட ரத்த வகை உள்ளவங்களை கொசுக்கள் அதிகமாக விரும்புகிறதாம்.

கொசு கடிப்பதற்கு காரணம் என்ன?

கொசு அதிகமா கடிக்கிறவர்களுக்கு ரத்தம் இனிப்பாக இருக்கும் என்று சொல்றது உண்மையா? அதில் ஒரு துளி கூட உண்மையில்லை; அது வெறும் ஜோக் தான். கொசு கடிக்கிறதுக்குப் பின்னால் வேற காரணம் இருக்கு. அதுக்கு ஒரு அறிவியல் இருக்கு, அதைத்தான் நாம் இப்போது பார்க்கப் போறோம். கொசு கடிப்பதற்கு ரத்த வகை கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

23
'O' குரூப் ரத்தம் உள்ளவர்களை அதிகம் கடிக்கும்
Image Credit : stockphoto

'O' குரூப் ரத்தம் உள்ளவர்களை அதிகம் கடிக்கும்

சமீபத்திய ஆய்வுகளில், 'O' குரூப் ரத்தம் உள்ளவர்களைத் தான் கொசுக்கள் அதிகமாக விரும்புவது தெரியவந்துள்ளது. அவர்களின் உயர் வளர்சிதை மாற்ற விகிதம் (high metabolic rate) தான் இதற்கு காரணம். அதுமட்டுமில்லாம, தோலின் வாசனை மற்றும் கிருமிகளும் கொசுக்களை ஈர்க்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மேலும் உடல் வெப்பமும் கொசுக்கடியை ஈர்க்கும் ஒரு காரணம் ஆகும். வியர்வையில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் அம்மோனியா, நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஈர்க்கும். தோலில் உள்ள பாக்டீரியாக்களும் கொசுக்கடிக்கு ஒரு காரணம். வியர்வையும் தோல் பாக்டீரியாவும் சேர்ந்து ஒருவித வாசனையை உருவாக்கும், அது கொசுக்களை ஈர்க்கும்.

நமது டிரஸ் கூட காரணம்

சுமார் 85% கொசுக்கடிக்கு ஒருவருடைய மரபணுக்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. உங்கள் உடல் எவ்வளவு வியர்வை மற்றும் வாசனையை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது உங்கள் டி.என்.ஏ-வில் உள்ளது. இதுமட்டுமின்றி மது குடிப்பவர்களை கொசு கடிக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதுமட்டுமின்றி நமது டிரஸ் கலர் கூட கொசுக்களை ஈர்க்குமாம். கருப்பு, பச்சை, ஊதா மற்றும் அடர் நிறங்களை கொசுக்கள் விரும்புமாம்.

Related Articles

Related image1
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு! காலநிலை மாற்றம் காரணமா?
Related image2
மழைக்காலத்தில் கொசுக்கள் தொல்லையா? அப்ப 'பூண்டை' இப்படி யூஸ் பண்ணுங்க..
33
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க என்ன வழி?
Image Credit : our own

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க என்ன வழி?

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். பூக்கள் மணம் கொண்ட சென்ட் அல்லது சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கொசுக்கள் இனிப்பு வாசனையை விரும்புமாம். கொசுக்கள் உடல் மிகவும் லேசானவை என்பதால் ஒரு மிதமான வேகத்தில் ஓடும் மின்விசிறி கூட கொசுக்களை உங்கள் அருகில் வரவிடாமல் தடுக்கும்.

ஆகவே மின்விசிறியை எப்போதும் ஓட விடுங்கள். வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்ப்பதும், வேப்ப எண்ணெய் தடவுவதும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த தீர்வாகும். மிக முக்கியமாக உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அங்கு தான் கொசுக்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cooling Chapati: கோடை காலத்தில் உடலை குளுகுளுவென வைக்கும் 5 வகை சப்பாத்திகள்.! செய்வது எப்படி? செய்முறை இதோ.!
Recommended image2
Parenting Tips: குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறாங்களா? லைட்டா எடுத்துக்காதீங்க! பின்னணியில் உளவியல் பிரச்சனை இருக்கு.!
Recommended image3
White Clothes Care: ஸ்கூல் யூனிஃபார்ம் கறை இனி காணாமல் போகும்.! வெள்ளை சட்டை மேலும் பளபளப்பாகும்.! சீக்ரெட் இதுதான்.!
Related Stories
Recommended image1
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு! காலநிலை மாற்றம் காரணமா?
Recommended image2
மழைக்காலத்தில் கொசுக்கள் தொல்லையா? அப்ப 'பூண்டை' இப்படி யூஸ் பண்ணுங்க..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved