MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரவு முழுவதும் ஏசியைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்.!

இரவு முழுவதும் ஏசியைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்.!

வீட்டில் எந்நேரமும் பேன் மற்றும் ஏசி உள்ள வீடுகளில் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் ஏசியை ஓடிக்கொண்டே இருக்கும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 18 2026, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஏசி அறை
Image Credit : Pixabay

ஏசி அறை

தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆகையால் வீட்டில் எந்நேரமும் பேன் மற்றும் ஏசி உள்ள வீடுகளில் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் ஏசியை ஓடிக்கொண்டே இருக்கும். குறிப்பாக இரவு புழுக்கம் அதிகமாக இருப்பதால் ஏசி அறையில் வெப்பத்தை உறிஞ்சி குளிர்ந்த காற்றை வெளியிடும்.

27
இரவு நேரத்தில் ஏசி பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்
Image Credit : Pixabay

இரவு நேரத்தில் ஏசி பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்

அப்போது தான் இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியும். ஆனால் ஏசியை சரியாக பயன்படுத்தாமல் இரவு இயக்கினால் பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக வறண்ட சருமம், தொண்டை வலி ஏற்படும். இந்நிலையில் இந்த கோடையில் இரவு ஏசி பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Related Articles

Related image1
ரூ.4,399-க்கு புதிய ஏர் கூலர் அறிமுகம்.. வீடு, கடை எல்லாம் இடத்திலும் இனி இதுதான்
Related image2
Omega-3 Foods: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த 10 உணவுகள்! இது சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
37
டைமர் பயன்படுத்தாமல் இருப்பது:
Image Credit : Pixabay

டைமர் பயன்படுத்தாமல் இருப்பது:

தற்போது நவீன ஏசிகள் ஸ்லீப் மோடு அல்லது டைமர் அமைப்புகளுடன் இருக்கிறது. ஆனால் மக்கள் அதை பயன்படுத்துவதில்லை. நீங்கள் அதிக விலை கொடுத்து ஏசி வாங்குகிறீர்கள் என்றால், மின்சாரத்தை மிச்சப்படுத்தவும், உங்கள் வீட்டிற்கு சாத்தியமான குளிர்ச்சியை அமைக்கவும் உதவும் அம்சங்களையாவது பயன்படுத்த மறக்காதீர்கள். இந்த அம்சங்கள் தானாகவே இரவு நேரத்தில் வெப்பநிலையை சரி செய்யும், மேலும் அதிக குளிர்ச்சியும் தவிர்க்கும் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும். 8 மணி நேரத்திற்கும் பயன்படுத்தினால் உங்களது மின்சாரம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஏசியில் இருந்து வரும் காற்று வறண்டு போகும்.

47
ஏசியை குறைந்த செல்சியஸில் பயன்படுத்து
Image Credit : Getty

ஏசியை குறைந்த செல்சியஸில் பயன்படுத்து

பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று தங்கள் ரூமில் இருக்கும் ஏசியை 16 முதல் 18 டிகிரி செல்சியஸில் வைப்பார்கள். முதலில் இது நன்றாக உணர்ந்தாலும் நீங்கள் தூங்கும் போது அது நிச்சயமாக உங்களது உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மருத்துவர்கள் கூற்றுப்படி, ஏசியை நீங்கள் சுமார் 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் வைத்து தூங்குவது தான் நல்லது.

57
ஏசி வடிகட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பது:
Image Credit : Google

ஏசி வடிகட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பது:

பலர் ஏசியை பயன்படுத்தினாலும் அதன் வடிகட்டியை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்து விடுகிறார்கள். இதனால் அழுக்கான வடிகட்டிகள் பாக்டீரியா மற்றும் ஒவ்வாமைகளை பரப்பும். இதன் விளைவாக ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மிக ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு மாதத்திற்கும் 2 முதல் 3 வாரங்கள் ஏசி வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள். இதனால் உங்களது ஏசியும் நன்றாக இயங்கும்.

67
படுக்கைக்கு அருகில் வைப்பது
Image Credit : X

படுக்கைக்கு அருகில் வைப்பது

படுகைக்கு மிக அருகில் ஏசியை வைப்பது தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், ஏசியில் இருந்து வரும் காற்று உங்களது உடலை தாக்கும். இதன் விளைவாக காலையில் கழுத்து வலி, தலைவலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் படுக்கைக்கும் ஏசிக்கும் இடையே குறைந்தது 3 முதல் 4 அடி தூரம் இருக்க வேண்டும்.

77
ஏசி அறையில் இந்த தவறை செய்யாதீர்கள்
Image Credit : Getty

ஏசி அறையில் இந்த தவறை செய்யாதீர்கள்

ஏசி இருக்கும் அறையான தவறாக இருந்தால் மின்சாரம் தான் வீணாகும். எனவே ஏசி இருக்கும் அறையின் கதவு, ஜன்னல் மூடி இருக்க வேண்டும். மேலும் சூரிய ஒளியை தடுக்க திரை சிலைகளை பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் அறையின் உள்ளே குளிர்ந்த காற்று தங்கும். மேலும் ஏசியின் மீதான அழுத்தம் குறையும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
காற்று குளிர்விப்பான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Breakup Mistakes: பிரேக்கப் வேதனை குறையணுமா? இதை மட்டும் செய்யாதீங்க!
Recommended image2
Washing Machine Cleaning Tips: வாஷிங் மெஷினில் துர்நாற்றம் வீசுகிறதா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் வாசனையாக்க சூப்பர் டிப்ஸ்
Recommended image3
காலை எழுந்தவுடன் படுக்கை மடிக்கிறீர்களா? உடனே நிறுத்துங்க!
Related Stories
Recommended image1
ரூ.4,399-க்கு புதிய ஏர் கூலர் அறிமுகம்.. வீடு, கடை எல்லாம் இடத்திலும் இனி இதுதான்
Recommended image2
Omega-3 Foods: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த 10 உணவுகள்! இது சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved