- Home
- உடல்நலம்
- Omega-3 Foods: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த 10 உணவுகள்! இது சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
Omega-3 Foods: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த 10 உணவுகள்! இது சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நம்ம உடலுக்கு ரொம்ப அவசியமான ஒரு வகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு. இதுல ALA, EPA, DHA-ன்னு மூணு முக்கிய வகைகள் இருக்கு.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த 10 உணவுகள்
உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் (Omega-3 Fatty Acids) ஒரு மிக முக்கியமான சத்தாகும். இது ஒருவகை "நல்ல கொழுப்பு" (Essential Fats). நம் உடலால் இதனைத் தானாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால், உணவின் மூலமாகவே இதனைப் பெற வேண்டும். இதில் ALA, EPA, DHA என மூன்று முக்கிய வகைகள் உள்ளன. ஒமேகா-3, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தி, இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மூளையின் வளர்ச்சிக்கு ஒமேகா-3 முக்கியம்
மூளையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஒமேகா-3 ரொம்ப முக்கியம். ஒமேகா-3 நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்தும். மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றைக் குறைக்கவும் இது உதவும். உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஒமேகா-3 உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
வால்நட் இரத்த அழுத்தத்தை குறைக்கும்
வால்நட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, சில நாள்பட்ட நோய்கள் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.

