முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது தலைவராக விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில், கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றுது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செங்கோட்டையன் பேசுகையில், இந்த நிகழ்ச்சி என்பது எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற. தமிழக மக்கள் விரும்புகின்ற எதிர்காலத்தில் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் கூடுதலாக 69 லட்சம் பேர் வாக்குகள் என்றவுடன் பீகாரிலே போராட்டங்கள் நடைபெற்றன ஆனால் தமிழ்நாட்டில் 97 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். அனைவரும் சொன்னார்கள், செங்கோட்டையன் எங்கு சென்று சேர்ந்திருக்கிறார் என்று, நான் சேர்ந்துள்ள இடம் கோட்டைக்கு செல்லும் இடமாக உள்ளது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பயணங்களை மேற்கொண்டேன். இரு தலைவர்களோடு பணியாற்றியதற்குப் பிறகு மூன்றாவது தலைவரோடு பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மனம் திறந்து பேசினார். விஜயுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், களப்பணி என்பது முக்கியமான ஒன்று.
அனைத்து இடங்களிலும் கழகத் தலைவருடைய புகழைப் மக்களே பரப்பி வருகின்றனர். எப்போது தேர்தல் வரும் போகிறது நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. வேறு இயக்கமாக இருந்தால் தேடித்தேடி சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டிய நிலை இருக்கும். ஆனால் வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் தேர்தல் தேதியை சொல்லுங்கள் சின்னத்தை சொல்லுங்கள் என்கின்றனர். நேரடியாக விமானத்தில் செல்லுகின்ற இயக்கமாக தமிழக வெற்றி கழகம் உள்ளது” என்றார்.


