போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
6ம் வகுப்பு முதலே பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

6ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 11, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே இலவச லேப்டாப் வழங்கவேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கைக்கு முதல்வர் பச்சைக் கொடியும் காட்டி உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் முக்கியத்துவம்
அண்மையில் புதுவையில் கல்வித்துறை சார்பில் 11, 12ம் வகுப்பு படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “நாட்டில் பள்ளிக்கல்வித் துறை மிகவும் முக்கியமானது. இது சிறப்பாக இருக்க ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது.
10 சதவீத இடஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறையை சிறப்பானதாக மாற்ற காலி பணியிடங்கள் அனைத்தையும் அரசு விரைந்து நிரப்பி வருகிறது. ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியுமென்ற நிலையை அரசு உருவாக்கி உள்ளது. அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வியாண்டு புதுவையில் 37 பேர் மருத்துவ கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பொறியியல், செவிலியர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பை சிரமமின்றி முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.
முதல்வர் உத்தரவு
மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் மூலம் அனைத்தையும் வேகமாக தெரிந்து கொள்ளும் வகையில் 6ம் வகுப்பில் இருந்தே இலவசமாக லேப்டாப் கொடுத்தால் மாணவர்களுக்கு வசதியாக இருக்குமென கருத்து தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

