புளிச்சக் கீரை சாப்பிடுவதால் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பொதுவாகவே கீரையில் அதிக சத்துக்கள் உள்ளன. கீரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை மற்றும் தனித்துவமான மருத்துவ பண்புகளை கொண்டுள்ளன. அதில் ஒன்றுதான் புளிப்பு கீரை. இந்தக் கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புளிச்சக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எண்ணற்ற நன்மைகளை பெறுவீர்கள். இப்போது புளிச்சக்கீரை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

புளிச்சக்கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

புளிச்சக்கீரையில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2 வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இந்தக் கீரையில் இருக்கும் ஆக்சாலிக் அமிலம் தான் சுவையை தருகின்றது. மேலும் இந்த புளிப்பு கீரையில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் ஆகிய சத்துக்கள் உள்ளன.

புளிச்சக்கீரை ஆரோக்கிய நன்மைகள் :

1. கண்பார்வையை மேம்படுத்தும் :

உங்களுக்கு கண் பார்வை பிரச்சனை இருக்கிறது என்றால், புளிச்சக்கீரை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் இந்தக் கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு இருக்கிறது. அது கண் பார்வையை மேம்படுத்த பெரிதும் உதவும்.

2. எடையை குறைக்க உதவும் :

நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் புளிச்சக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புளிச்ச கீரையில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. முக்கியமாக இதில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் சுத்தமாகவும் இல்லை. எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

3. வீக்கத்தை குறைக்கும் :

புளிச்சக்கீரையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இந்த கீரையில் புரோட்டோகாடெக்யிக் என்னும் அமிலம் உடலை சுத்தம் செய்து, உடல் வீக்கத்தை குறைக்கும்.

4. இரத்த அழுத்தத்தை குறைக்கும் :

தற்போது மன அழுத்தம் காரணமாக பலரும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை உள்ளவர்கள் புளிப்பு கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

5. எலும்புகளை வலுவாக்கும் :

புளிச்ச கீரையில் கால்சியம் அதிகமாக உள்ளதால் இதை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலுவாக்கும். குறிப்பாக 30 வயதிற்கு பிறகு பெண்களுக்கு எலும்பு பலவீனமாவதை இந்த கீரை தடுக்கும்.

6. தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் :

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் புளிச்சக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, இரவில் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

7. இரத்த சோகையை சரியாக்கும் :

ஊட்டச்சத்து குறைபாட்டால் பெண்களுக்கு இரத்த சோகை வருகின்றது. இரத்த சோகை சரியாக புளிச்ச கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் புளிச்ச கீரையில் பாஸ்பரஸ், சோடியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளன. அவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து இரத்த சோகையை குணமாக்கும்.

8 . செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது :

புளிச்ச கீரையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் குடல் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். இது தவிர இது உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் இது உதவும்.

9. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

புளிச்சக்கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

10. சரும பிரச்சனைகள் :

உங்களுக்கு சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனைகள் இருந்தால் புளிச்சக்கீரையில் சட்னி, துவையல் செய்து சாப்பிடுங்கள். விரைவில் குணமாகும்.

11. உடல் சூட்டை தணிக்கும் :

புளிச்சக்கீரை குளிர்ச்சியை தரும். எனவே உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் உடலை குளிர்ச்சியாக வைக்க இந்த கீரை சாப்பிடுங்கள்.

12. ஆண்மை குறைப்பாட்டை போக்கும் :

ஆண்மை குறைபாடுள்ளவர்களுக்கு புளிச்சக்கீரை ரொம்பவே நல்லது.