- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சரிந்தது சன் டிவி சாம்ராஜ்ஜியம்; TRP ரேஸில் மீண்டும் சீனுக்கு வந்த விஜய் டிவி தொடர்கள் - டாப் 10 சீரியல் இதோ
சரிந்தது சன் டிவி சாம்ராஜ்ஜியம்; TRP ரேஸில் மீண்டும் சீனுக்கு வந்த விஜய் டிவி தொடர்கள் - டாப் 10 சீரியல் இதோ
டிஆர்பி ரேஸில் சன் டிவி தொடர்கள் மளமளவென சரிவை சந்தித்துள்ளன. அதே வேளையில் விஜய் டிவி சீரியல்கள் விறுவிறுவென முன்னேறி இருக்கின்றன.

Top 10 Tamil Serial TRP Rating
சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்களும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு தான் செம டிமாண்ட் இருந்து வருகிறது. இந்த சீரியல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வார வாரம் வெளியிடப்படும். அதன்படி 2025-ம் ஆண்டின் 31வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்று உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாப் 10 சீரியல்கள்
கடந்த வாரம் டாப் 10ல் இடம்பெறாமல் இருந்த விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் மீண்டும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடந்த 6.24 புள்ளிகளுடன் 11ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.68 புள்ளிகளை பெற்று 10ம் இடத்தை பிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 9ம் இடத்தில் நீடிக்கிறது. இந்த சீரியல் 6.71 டிஆர்பி புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் டிஆர்பியில் முன்னேறி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 8-ம் இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியல் உள்ளது.
சரிவை சந்தித்த சன் டிவி சீரியல்கள்
அன்னம் சீரியல் கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலையே ஓவர்டேக் செய்து டிஆர்பி ரேஸில் 5ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் அதன் டிஆர்பி மளமளவென குறைந்ததால், 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் 8.65 புள்ளிகள் பெற்றிருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் 7.88 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல் கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் மருமகள் சீரியல், இந்த வாரம் 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் இந்த சீரியலுக்கு 8.51 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்தன. ஆனால் இந்த வாரம் ரேட்டிங்கில் அடிவாங்கி வெறும் 8.11 டிஆர்பியை மட்டுமே பெற்றுள்ளது.
டிஆர்பியில் கம்பேக் கொடுத்த விஜய் டிவி சீரியல்கள்
கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்து இருந்த விஜய் டிவியின் அய்யனார் துணை மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய சீரியல்கள் இந்த வாரம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளன. இதில் கடந்த வாரம் 6.89 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருந்த அய்யனார் துணை சீரியல், இந்த வாரம் மாஸாக 8.12 டிஆர்பி ரேட்டிங் பெற்று 6ம் இடத்துக்கு தாவி இருக்கிறது. அதேபோல் கடந்த வாரம் 8.04 ரேட்டிங் உடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இந்த வாரம் 8.46 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
டாப்பில் இருந்தாலும் டிஆர்பியில் சரிந்த சன் டிவி தொடர்கள்
வழக்கம்போல் இந்த வாரமும் டாப் 4 இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் அதன் டிஆர்பி ரேட்டிங் மிகவும் கம்மியாகி உள்ளது. அதன்படி 4ம் இடத்தில் உள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரம் 9.02 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 8.81 ஆக சரிந்துள்ளது. 3ம் இடத்தில் உள்ள கயல் சீரியலும் கடந்த வாரம் 9.33 புள்ளிகள் பெற்றிருந்தது. ஆனால் இந்த வாரம் அந்த சீரியலுக்கு 8.88 டிஆர்பி மட்டுமே கிடைத்துள்ளது. 2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு இந்த வாரம் 9.46 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 10.70 டிஆர்பி பெற்றிருந்தது. முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலும் கடந்த வாரம் 11.27 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் மளமளவென சரிந்து வெறும் 10.18 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

