MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஸ்விஃப்டு முதல் பென்ஸ் வரை கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டியிடம் இத்தனை விதவிதமான கார்கள் உள்ளதா?

ஸ்விஃப்டு முதல் பென்ஸ் வரை கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டியிடம் இத்தனை விதவிதமான கார்கள் உள்ளதா?

சன் டிவியின் கயல் தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன நடிகை சைத்ரா ரெட்டியின் கார் கலெக்‌ஷன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 05 2025, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chaitra Reddy Car Collection
Image Credit : our own

Chaitra Reddy Car Collection

பெங்களூருவை சேர்ந்தவரான சைத்ரா ரெட்டி, ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக சைத்ரா ரெட்டி நாயகியாக நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழுக்கு தாவிய சைத்ரா, அதில் யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் வில்லியாக நடித்தார். அதில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. அந்த சீரியல் முடிந்த கையோடு சைத்ராவுக்கு கிடைத்த ஒரு பிளாக்பஸ்டர் வாய்ப்பு தான் கயல் சீரியல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சைத்ரா

24
சைத்ரா ரெட்டி சம்பளம்
Image Credit : our own

சைத்ரா ரெட்டி சம்பளம்

சன் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் கயல் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 4 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு வருகிறது. சன் டிவியில் நடிக்கும் சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது சைத்ரா ரெட்டி தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். அந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவ்வை விட சைத்ரா ரெட்டிக்கு தான் சம்பளம் அதிகம். இவர் சீரியல் மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி தன்னுடைய சமையல் திறமையையும் வெளிப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய சைத்ராவுக்கு 3ம் இடம் கிடைத்தது.

Related Articles

Related image1
Kayal Serial: சன் டிவி 'கயல்' சீரியல் படைத்த முக்கிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
Related image2
ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக சம்பளமா? கயல் சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
34
சைத்ரா ரெட்டி கார் கலெக்‌ஷன்
Image Credit : Instagram

சைத்ரா ரெட்டி கார் கலெக்‌ஷன்

நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது தன்னிடம் உள்ள கார் கலெக்‌ஷன் பற்றி கூறினார். அதன்படி அவரிடம் மொத்தம் 4 கார்கள் சொந்தமாக வைத்திருந்தாராம். அதில் அவர் முதல்முதலில் வாங்கியது மாருதி ஸ்விஃப்டு கார் தானாம். அந்த காரை மூன்று ஆண்டுகள் வைத்திருந்த பின்னர், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானதால், வேறு வழியின்றி அந்த காரை விற்றுவிட்டாராம். அந்த ஊரடங்கு முடிந்த பின்னர் தான் சன் டிவியில் கயல் சீரியல் தொடங்கப்பட்டது.

44
பென்ஸ் கார் வாங்கிய சைத்ரா
Image Credit : Instagram

பென்ஸ் கார் வாங்கிய சைத்ரா

கயல் சீரியலில் அதிக சம்பளம் வாங்கி வந்ததால் நான்கு ஆண்டுகளில் கோடீஸ்வரி ஆகிவிட்டார் சைத்ரா. பின்னர் மகிந்திராவின் Alturas G4 என்கிற செவன் சீட்டர் கார் வாங்கினாராம் சைத்ரா. இதன்பின்னர் தன்னுடைய ட்ரீம் காரான மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரை கடந்த ஆண்டு வாங்கினார் சைத்ரா. இதுதவிர அவரது கணவரிடமும் ஒரு கார் உள்ளதாம். சைத்ரா வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பென்ஸ் கார் வாங்கியதும் தன்னுடைய பெற்றோர் மிகவும் சந்தோஷப்பட்டதாக சைத்ரா ரெட்டி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!
Recommended image2
Singappenne : ஆனந்தி - அன்புவின் ஜாலி மொமெண்ட்ஸ்! கோகிலாவை அதிர வைத்த மாமனார் & மாமியார்.. கதையில் புதிய திருப்பம்!
Recommended image3
ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Related Stories
Recommended image1
Kayal Serial: சன் டிவி 'கயல்' சீரியல் படைத்த முக்கிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
Recommended image2
ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக சம்பளமா? கயல் சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved