- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ஹிட் திருப்பம்; மாமா முத்துவேல் - மருமகன் கதிர் சமாதானம்; கோபத்தில் கொந்தளித்த சக்திவேல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ஹிட் திருப்பம்; மாமா முத்துவேல் - மருமகன் கதிர் சமாதானம்; கோபத்தில் கொந்தளித்த சக்திவேல்!
Pandian Stores 2 Serial Twist Muthuvel and Kathir Reunite: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனது மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து கதிர் அவருக்கு ஆறுதலாக இருந்து வருகிறார்.

பகையை மறந்து ஒன்று சேர்ந்த மாமனார் – மருமகன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாமனார் மற்றும் மருமகன் இருவரும் இப்போது பகையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், இது தற்காலிகம் தான் என்று மருமகன் சொன்னது தான் சற்று வேதனை அளிக்கிறது. இது குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியின் அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் எதிர்வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இந்த சீரியல் ஆரம்பித்தது முதல் இப்போது வரையில் இரு குடும்பமும் பகையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் கோமதி தனது கணவருக்கு கூட தெரியாமல் தனது அண்ணன்களின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கதிர் மற்றும் ராஜீ இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி திருப்பம்
அதற்கு முன்பு வரை ராஜீ வேறொரு பையனை காதலித்து வந்தார். இது குறித்து கதிர் பல முரை வார்னிங் கொடுத்தும் ராஜீ கேட்பதாக இல்லை. இருவருக்குமே ஆரம்பம் முதலே பிடிக்காது. இந்த சூழலில் தான் கோமதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாட்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளனர். காலப்போக்கில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இப்போது கதிர் சொந்தமாக டிராவல்ஸ் திறந்துள்ளார். ராஜியோ தனது இலட்சியமான எஸ் ஐ வேலைக்காக படித்துக் கொண்டிருக்கிறார்.
சக்திவேல் கொந்தளிப்பு, Sakthivel anger in Pandian Stores
இந்த நிலையில் தான் தனது ஒரே மகள் ராஜீயை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் கோமதி மற்றும் முத்துவேல் குடும்பத்தில் பகை கொஞ்சம் கூடுதலானது. இதற்கிடையில் குமரவேல் மற்றும் அரசியின் காதல் காட்சிகள் ஒளிபரப்பானது. ஆனால், அதுவும் பாதியில் நின்றது. இப்போது மீண்டும் அவர்களது காதலுக்கு இயக்குநர் பச்சை கொடி காட்டலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார். எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் தனது தங்கை கோமதியின் குடும்பத்திற்கு கஷ்டம் என்று வரும் போது ஓடி வந்து உதவி செய்தனர்.
விஜய் டிவி சீரியல் அப்டேட், Vijay TV serial updates Tamil
ஆம், தங்கமயில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்த நிலையில் பாண்டியன் குடும்பத்தினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது காலை முதல் இரவு வரை முத்துவேலும் சரி சக்திவேலும் சரி இருவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே காத்திருந்தனர். இவ்வளவு ஏன் கூண்டில் நின்று இருவரும் கோமதியின் குடும்பத்திற்கு ஆதரவாக சாட்சி சொன்னர். இப்படியான நிலையில் தனது அண்ணன்களுக்கு தனது கையால் சாப்பாடு பரிமாற வேண்டும் என்பதற்காக கோமதி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
Pandian Stores season 2 full story Tamil
அப்போது சக்திவேல் பிரச்சனையை ஏற்படுத்த இரு வீட்டாருக்கும் மீண்டும் சண்டையானது. அப்போதுதான் கதிர் மற்றும் ராஜீக்கு திருமணம் வைத்தது குறித்து கோமதி எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இப்படி இரு குடும்பமும் பகையாக இருக்கும் போது கதிர் மட்டும் தனது மாமனாருடன் உறவாடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது மாமனாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்து அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். ஆம், முத்துவேலுவிற்கு குடல் புற்றுநோய் (Intestinal Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்துவேல் மற்றும் கதிர் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருச்சிக்கு சென்றனர். அங்கு முத்துவேலுவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
Pandian Stores 2 serial latest twist Tamil
அப்போது அவருக்கு தீவிர அறுவை சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மருத்துவர் அட்வைஸ் செய்த நிலை அது முத்துவேலுவை வெகுவாக பாதிப்படையச் செய்தது. பின்னர் திருச்சி சிகிச்சையை முடித்துக் கொண்டு முத்துவேல் மற்றும் கதிர் இருவரும் வீடு திரும்பிய போது சக்திவேல் கவனித்துவிட்டார். இது குறித்து கதிரிடம் கேட்ட போது எந்த பதிலும் இல்லை. சக்திவேல் தனது அண்ணனிடம் கேட்டதற்கும் அதற்கு பதில் இல்லை. இதைத்தொடர்ந்து வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த போது அக்கவுண்டிலிருந்து பல லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது குறித்து குமரவேல் தனது அப்பாவிடம் கேட்க, அதற்கு அண்ணன் தான் எடுத்திருக்கிறார். அதற்கு அவர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. ஒருவேளை அந்த பணத்தை வைத்து மருமகனுக்கு ஏதாவது இடம் வாங்கி கொடுக்கிறாரா? என்று சந்தேகம் அடைந்தார்.
Kathir and Raji in Pandian Stores 2 Serial
கதிர் வீட்டிலோ அல்லது முத்துவேல் வீட்டிலோ இந்த குடல் புற்றுநோய் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முத்துவேல் யாருக்கும் தெரியக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால், கதிர் தனது வீட்டில் தனது மனைவி ராஜீயிடம் கூட சொல்லவில்லை. இப்படி பகையை மறந்து முத்துவேல் மற்றும் கதிர் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் பணத்திற்காகத்தான் கதிர் தனது அண்ணன் உடன் இருக்கிறார் என்று சக்திவேல் வீண் பழி சுமத்துகிறார். இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.