MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மனோஜின் காதலுக்கு வேட்டு வைத்த ரோகிணி... ரேகாவுக்கு சிந்தாமணியால் வந்த புது சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்

மனோஜின் காதலுக்கு வேட்டு வைத்த ரோகிணி... ரேகாவுக்கு சிந்தாமணியால் வந்த புது சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணியை தன்னுடைய பியூட்டி பார்லருக்கு அழைத்து பேசி உள்ளார். அதன்பின் என்ன ஆனது என பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 18 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தான் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணி உடன் வெளியே சென்று சாப்பிட சென்றிருக்கிறார். மனோஜ் காரில் போகலாம் என சொல்ல, அதற்கு ஹரிணி தனக்கு ஆட்டோவில் போக ஆசை என சொல்லி அவரை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். அப்போது செல்லும் வழியில் ஹரிணி வாந்தி எடுக்கிறார். அப்போது அவருக்காக சோடா வாங்கிவர மனோஜ் செல்ல, அந்த கேப்பில் ஹரிணியை சந்திக்கும் ரோகிணி, அவரிடம் நல்லவர் போல பேசி, அவருக்கு தன்னுடைய பார்லர் விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டு செல்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
மனோஜின் திமிர்த்தனம்
Image Credit : jiohotstar

மனோஜின் திமிர்த்தனம்

இதன்பின்னர் ஹரிணியை அழைத்துக் கொண்டு மனோஜ், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். அவர் கூடவே முத்து, மீனா, ஸ்வேதா ஆகியோரும் வந்திருக்கிறார்கள். அப்போது மனோஜ் அவர்கள் முன்னிலையில், ஓவராக பந்தா பண்ணிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு ஹோட்டலா, அமெரிக்காவுல இதைவிட எவ்வளவு பெரிய ஹோட்டல்லாம் இருக்கும் என்று பேசுகிறார் மனோஜ். அவரின் இந்த நடவடிக்கை ஹரிணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தன்னுடைய சொந்த தம்பியின் ஹோட்டலையே இப்படி தரக்குறைவா பேசுறாரே என ஹரிணி செம அப்செட் ஆகிறார்.

Related Articles

Related image1
ரோகிணியிடம் தனியாக சிக்கிய மனோஜின் வருங்கால மனைவி; சிந்தாமணியால் காத்திருக்கும் ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை
Related image2
சிந்தாமணியால் பிரேக் அப் ஆகும் சத்யா - ரேகாவின் காதல்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
35
சிந்தாமணியின் சூழ்ச்சி
Image Credit : jiohotstar

சிந்தாமணியின் சூழ்ச்சி

மறுபுறம் சிந்தாமணி, ரேகாவின் அப்பாவை சந்தித்து சத்யாவின் காதலைப் பற்றி பேசுகிறார். அவரும் சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு மனசு மாறிவிடுகிறார். நீ சொன்னது கரெக்ட் தான், நம்ம பொண்ணை ஒரு நல்ல இடத்தில் தான் கட்டிக் கொடுக்க வேண்டும். அதையே நானும் விரும்புவேன். இந்த விஷயத்துல நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறேன். முதலில் அவனை வேலையை விட்டு தூக்குறேன்னு சொல்கிறார். ஆனால் அதையெல்லாம் செய்ய வேண்டாம் என சொல்லும் சிந்தாமணி, நீ இப்போ அவனை வேலையை விட்டு தூக்குனா, நம்ம பொண்ணு அவன்கூட ஓடிப் போயிடும். அதனால நம்ம பொண்ணை எங்காச்சும் வெளி ஊருக்கு அனுப்புவோம் என ஐடியா கொடுக்கிறார்.

45
மனோஜை திட்டிய ஹரிணி
Image Credit : jiohotstar

மனோஜை திட்டிய ஹரிணி

ஸ்ருதியின் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஹரிணியிடம் அட்வாண்டேஜ் எடுக்கும் மனோஜ், இதெல்லாம் சாப்பிடாத, இது உனக்கு ஒத்துக்காது, ஸ்பூன்ல சாப்பிடுனு சொல்லி பந்தா பண்ணுகிறார். இதனால் கடுப்பாகும் ஹரிணி, மனோஜை திட்டிவிடுகிறார். இதனால் ஷாக் ஆகிறார் மனோஜ். பின்னர் வீட்டுக்கு செல்லும் முத்து, மீனாவிடம் பேசுகையில், மனோஜ் பண்ணுறது சரியில்ல, ஹரிணியோட முகமே மாறிப்போச்சு என சொல்கிறார். அதன்பின்னர் ரேகா - சத்யா இருவருக்கும் எப்படி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசுகிறார்கள்.

55
ரோகிணியின் டிராமா
Image Credit : jiohotstar

ரோகிணியின் டிராமா

இறுதியாக ஹரிணி, ரோகிணியின் பியூட்டி பார்லருக்கு செல்கிறார். அவரிடம் மனோஜ் தான் தன்னுடைய கணவர் என்பதை தெரியப்படுத்துவதற்காக தன்னுடைய மொபைலில் தானும் மனோஜும் ஜோடியாக எடுத்த போட்டோவை வால்பேப்பராக வைத்திருக்கிறார். அதை எப்படியோ ஹரிணியிடம் காட்டிவிடுகிறார். அதன்பின்னர் இவர்கூட தான் தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என ஹரிணி சொன்னவுடன். ரோகிணி அழுது டிராமா போட ஆரம்பிக்கிறார். அநேகமாக இந்த கல்யாணம் நின்றுபோக அதிகம் வாய்ப்புள்ளது. அதைப்பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
குணசேகரனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி... மதிவதினியின் பலே திட்டம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
ஒரேயொரு சீனால் தலைகீழாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதை – இனி ஆட்டம் வேற மாதிரி!
Recommended image3
சன் டிவி vs விஜய் டிவி : TRP கிங் யார்? இந்த வார டாப் 10 சீரியல்கள் பட்டியல் இதோ
Related Stories
Recommended image1
ரோகிணியிடம் தனியாக சிக்கிய மனோஜின் வருங்கால மனைவி; சிந்தாமணியால் காத்திருக்கும் ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை
Recommended image2
சிந்தாமணியால் பிரேக் அப் ஆகும் சத்யா - ரேகாவின் காதல்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved