MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • TRP ரேஸில் சரிந்த சன் டிவி... சம்பவம் பண்ணிய விஜய் டிவி - இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ

TRP ரேஸில் சரிந்த சன் டிவி... சம்பவம் பண்ணிய விஜய் டிவி - இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ

சின்னத்திரையில் சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இந்த வாரம் டிஆர்பி ரேஸில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2026, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 10 Tamil Serial TRP Rating
Image Credit : instagram

Top 10 Tamil Serial TRP Rating

தமிழ்நாட்டில் சீரியல்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சினிமாவுக்கு நிகராக விறுவிறுப்பான கதைக்களத்துடன் செல்வதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியல்களை விரும்பிப் பார்க்க தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி ஓடிடியின் வரவுக்கு பின்னர் எந்த நேரத்திலும் சீரியல் பார்க்கலாம் என்கிற நிலை வந்துவிட்டதால் அதை பார்ப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சீரியல்களுக்கான ரெஸ்பான்ஸை அதன் டிஆர்பி ரேட்டிங் வைத்து தான் கணிப்பார்கள். அந்த வகையில் 2026-ம் ஆண்டின் 4-வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

24
டாப் 10 சீரியல்களின் டிஆர்பி
Image Credit : instagram

டாப் 10 சீரியல்களின் டிஆர்பி

கடந்த வாரத்தைப் போல் இந்த வாரம் சன் டிவியின் புத்தம் புது தொடரான செல்லமே செல்லமே 10வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 5.29 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 5.62 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதேபோல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் சின்ன மருமகள் ஆகிய சீரியல்கள் முறையே 8 மற்றும் 9-வது இடத்தை பிடித்திருக்கிறது. இதில் 9-ம் இடத்தில் உள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 6.50 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 8-ம் இடத்தை பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7.15 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.

Related Articles

Related image1
மளமளவென சரிந்த டிஆர்பி... தடாலடியாக மாறிய டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியல்..!
Related image2
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்
34
சரிவை சந்தித்த சன் டிவி தொடர்கள்
Image Credit : instagram

சரிவை சந்தித்த சன் டிவி தொடர்கள்

திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 7-ம் இடத்திலேயே நீடிக்கிறது. அதற்கு 7.55 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆறாம் இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியலும், ஐந்தாம் இடத்தில் மருமகள் சீரியலும் உள்ளன. இதில் அன்னம் சீரியல் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 7.96 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் உள்ளது. அதேபோல் மருமகள் சீரியல் கடந்த வாரம் 3ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் மளமளவென சரிந்து ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு 8.03 டிஆர்பி கிடைத்துள்ளது.

44
தட்டி தூக்கிய விஜய் டிவி சீரியல்கள்
Image Credit : Facebook

தட்டி தூக்கிய விஜய் டிவி சீரியல்கள்

டாப் 4 இடங்களில் முதல் இரண்டு இடங்களை சன் டிவி சீரியல்களும், அடுத்த இரண்டு இடங்களை விஜய் டிவி சீரியல்களும் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 4-ம் இடத்துக்கு தாவி 8.04 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல் அய்யனார் துணை சீரியலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 8.48 புள்ளிகள் உடன் 3-ம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தை பிடித்துள்ள கயல் சீரியலுக்கு 8.82 டிஆர்பி கிடைத்துள்ளது. முதலிடத்தில் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு மகா சங்கமம் உள்ளது. அதற்கு 9.58 புள்ளிகள் கிடைத்துள்ளன.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அருணிடம் சரண்டர் ஆன முத்து... ரவியை பிளாக்மெயில் செய்யும் நீத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image3
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
மளமளவென சரிந்த டிஆர்பி... தடாலடியாக மாறிய டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியல்..!
Recommended image2
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved