MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணி அனுப்பிய வீடியோ... மனோஜை அடிவெளுத்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

ரோகிணி அனுப்பிய வீடியோ... மனோஜை அடிவெளுத்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் மனோஜ் உடன் டான்ஸ் ஆடியது போல் இருக்கும் வீடியோவை விஜயாவுக்கு அனுப்பி விட்டிருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், உடம்பு சரியில்லாமல் இருக்கும் கிரிஷ், முத்துவையும், மீனாவையும் பார்க்க வேண்டும் என அடம்பிடித்த நிலையில், அதைப்பற்றி ரோகிணி சிந்தாமணியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ எதுக்கு அவங்க வரணும், உன்னோட வீட்டுக்காரர் மனோஜை கூப்பிட்டிருக்க வேண்டியதுதான என சொல்லிக்கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. ஒருவேளை முத்துவும் மீனாவும் தான் வந்திருப்பார்களோ என அஞ்சி, சிந்தாமணி அங்கிருந்த அறை ஒன்றில் ஒளிந்து கொள்கிறார். இதையடுத்து ரோகிணி சென்று கதவை திறக்கிறார்.

25
கிரிஷிடம் பேசும் முத்து - மீனா
Image Credit : jiohotstar

கிரிஷிடம் பேசும் முத்து - மீனா

கதவை தட்டியது வேறுயாருமில்லை, மீனாவின் தம்பி சத்யா தான். அங்கு சென்று முத்து, மீனாவுக்கு வீடியோ கால் போடும் சத்யா, கிரிஷிடம் கொடுத்து பேசச் சொல்கிறார். ரோகிணியிடம் வீடியோ கால் பண்ணி பேசினால் அதையே ஒரு ஆதாரமாக வைத்துக் கொள்வார் என்பதால், விவரமாக சத்யாவை அங்கு அனுப்பி வீடியோ கால் போட சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து கிரிஷிடம் பேசும் முத்து - மீனா அவருக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். இதன்பின்னர் சத்யா அங்கிருந்து கிளம்பும் போது, ரூமுக்குள் சிந்தாமணி ஒளிந்திருப்பதை பார்த்துவிடுகிறார்.

Related Articles

Related image1
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Related image2
ரோகிணிக்கு மீனா செய்யும் உதவி... விஜயாவை பிரையின் வாஷ் பண்ணும் சிந்தாமணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
35
தனி அறையில் முத்து - மீனா
Image Credit : jiohotstar

தனி அறையில் முத்து - மீனா

மறுபுறம் முத்துவுக்கும் மீனாவுக்கும் தனி ரூம் ஒன்றை அண்ணாமலை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அதனால் மனோஜ் வெளியே ஹாலில் படுத்திருக்கிறார். மீனா ரூமுக்குள் சென்ற உடன் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. முத்து ரூமை ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணி வைத்திருப்பது போல் அலங்காரம் செய்திருக்கிறார். கட்டிலில் ரோஜா மலர்களால் ஹார்ட் டிசைனை வரைந்து வைத்துள்ள முத்து, தங்கள் இருவரின் பெயரையும் பூவினாலே எழுதி வைத்திருக்கிறார். இதைப்பார்த்த மீனா ஸ்தம்பித்துப் போக, அவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யத் தொடங்குகிறார் முத்து.

45
கனவு கண்ட மனோஜ்
Image Credit : jiohotstar

கனவு கண்ட மனோஜ்

அடுத்த காட்சியிலேயே மனோஜும் ரோகிணியும் ஒரே காரில் இருப்பது போல காட்டுகிறார்கள். காரில் இருக்கும் மனோஜை ரோகிணி Flirt பண்ணுவது போல் காட்டுகிறார்கள். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனோஜ், காரை விட்டு இறங்கி ஓடுகிறார். அவரை ரோகிணி துரத்திச் செல்கிறார். கடைசியில் பார்த்தால் அது கனவு. மனோஜ் தூக்கத்திலேயே ரோகிணி என்னைய விட்று என சொல்லி கத்த, சத்தம் கேட்டு எழுந்து வந்த விஜயா, மனோஜை எழுப்பி திட்டுகிறார். அதற்கு அவர், நான் என்ன செய்வது கனவில் வந்தால் அதனால் தான் இப்படி கத்திவிட்டேன் என சொல்கிறார்.

55
மனோஜை அடிவெளுத்த விஜயா
Image Credit : jiohotstar

மனோஜை அடிவெளுத்த விஜயா

மறுநாள் காலையில் விஜயாவின் போனுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. ரோகிணி தான் அந்த வீடியோவை அனுப்பி இருக்கிறார். அதில் மனோஜ், ரோகிணியோடு சேர்ந்து டான்ஸ் ஆடுவது போல் இருக்கிறார். அந்த வீடியோவை ரோகிணி ஏஐ மூலம் ரெடி பண்ணி அனுப்பி இருக்கிறார். ஆனால் விஜயா அது உண்மையான வீடியோ என நம்பி, மனோஜை துரத்தி துரத்தி அடித்திருக்கிறார். ஆனால் மனோஜ் அது ஏஐ வீடியோ என சொல்லியும் நம்பாமல் விஜயா அவரை அடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame: அம்மாவிடம் உண்மையை சொன்ன விக்ரம்; விஜியை போட்டுத்தள்ள பிளான் போடும் லட்சுமி!
Recommended image2
ஆடுகளம் சீரியல் சத்யா ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா? டெல்னா டேவிஸின் சீக்ரெட் சொத்து விவரம் இதோ!
Recommended image3
சின்னாபின்னமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?! அஞ்சலியுடன் கோவிலில் சரவணன்.. கையும் களவுமாகப் பிடித்த மீனா!
Related Stories
Recommended image1
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
ரோகிணிக்கு மீனா செய்யும் உதவி... விஜயாவை பிரையின் வாஷ் பண்ணும் சிந்தாமணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved