- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் மகள் ரேகா, மீனாவின் தம்பியிடம் வீட்டுக்கே சென்று புரபோஸ் பண்ணி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சிந்தாமணியின் மகள் ரேகா நேராக மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்கிறார். அப்போது வீட்டில் இருக்கும் மீனாவின் அம்மா, என்னம்மா காலையிலேயே வந்திருக்க என்ன விஷயம் என விசாரிக்கிறார். அதற்கு அவர், நான் சத்யாவை பார்ப்பதற்காக தான் வந்தேன் என சொல்கிறார். ஒரு மீட்டிங்கு போறேன், அதனால சத்யாகிட்ட ஒரு விஷயத்தை கேட்கணும் என ரேகா சொன்னதும், அவன் மேல துணி காயப்போட்டுட்டு இருக்கான், நான் போய் அவனை கூட்டிட்டு வர்றேன் என மீனாவின் அம்மா சொல்ல, இல்ல நானே போய் பேசிக்கிறேன் நீங்க உங்க வேலையை பாருங்கனு சொல்லிவிட்டு விறுவிறுவென மாடிக்கு செல்கிறார் ரேகா.
சத்யாவிடம் காதலை சொன்ன ரேகா
மாடிக்கு செல்லும் ரேகாவை பார்த்த சத்யா, என்ன இப்போ வந்திருக்கீங்க என கேட்கிறார். அதற்கு ரேகா, நைட்டு எனக்கு தூக்கமே வரமாட்டேங்குதுனு சொல்கிறார்., அச்சச்சோ, டாக்டரை போய் பார்க்கலாமா என சத்யா கேட்டதும், எனக்கு உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லனு சொல்லும் ரேகா, என்னைய பத்தி நீ என்ன நினைக்குறனு சத்யாவிடம் கேட்கிறார். நீ என்னோட பாஸ் என சத்யா சொன்னதும், அவ்வளவுதானா என கேட்கும் ரேகா, இல்ல நீ என்னோட ஃபிரெண்டு என சொல்கிறார் சத்யா. நீ என்னைய ஃபிரெண்டா தான் நினைக்குற ஆனா நான் உன்னையை ஃபிரெண்டா நினைக்கலனு சொல்லி காதலை சொல்லிவிடுகிறார் ரேகா.
டைம் கேட்கும் சத்யா
ரேகா காதலை சொன்னதும் அதிர்ச்சி அடைகிறார் சத்யா. ரேகாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார். நான் காதலை சொல்லிட்டேன் நீ எதுவுமே சொல்லலையேனு ரேகாவே கேட்கிறார். அதற்கு சத்யா, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தமாதிரி யாருமே என்கிட்ட சொன்னதில்ல, என்ன பண்றதுனே தெரியல, ஒரே பதட்டமா இருக்கு. உன்னோட ஸ்டேட்டஸ் என்ன, என்னோட ஸ்டேட்டஸ் என்ன, எப்படி இதெல்லாம் ஒத்துவரும்னு சொல்லி பார்க்கிறார் சத்யா. அதெல்லாம் பார்க்கக்கூடாதுனு ரேகா சொல்ல, சரி எனக்கு கொஞ்சம் டைம் கொடுனு சத்யா கேட்டிருக்கிறார். இதன்பின்னர் ரேகா அங்கிருந்து கிளம்பின் செல்கிறார்.
கிரிஷை பார்க்க முத்து போடும் பிளான்
மறுபுறம் மீனா, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து ரோகிணி தன்னிடம் கிரிஷ் பற்றி சொன்னதை சொல்கிறார். உடனே விஜயா, நீயும் ரோகிணியும் கூட்டுக்களவாணிகளா என சொல்லி திட்ட ஆரம்பிக்கிறார். அருகில் இருந்த அண்ணாமலை, விஜயாவை அடக்கி உட்காரவைத்துவிட்டு, நீங்க ரெண்டு பேரும் கிரிஷை பார்க்க ரோகிணியின் வீட்டுக்கு போக வேண்டாம் என சொல்கிறார். கிரிஷுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் அதைவைத்து ரோகிணி, எதாச்சும் சகுனி வேலை பார்க்கும், அதனால நீங்க அங்க போக வேண்டாம் என சொல்கிறார்.
நீத்துவை சந்தித்த ஸ்ருதியின் அம்மா
நீங்க போக வேண்டாம் ஆனாலும் நீங்க கிரிஷை பார்க்கணும்னு சொல்கிறார் அண்ணாமலை. இதையடுத்து மீனாவிடம் பேசும் முத்து, நம்மளும் அங்க போக வேண்டாம், கிரிஷையும் நம்ம வரவச்சு பார்க்க வேண்டாம். ஆனால் எப்படியாவது நம்ம கிரிஷை பார்க்குறோம் என சொல்கிறார். இதையடுத்து நீத்துவின் வீட்டிற்கு ஸ்ருதியின் அம்மாவும், அப்பாவும் செல்கிறார்கள். அவரிடம் 9 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுக்கிறார்கள். மாப்பிள்ளை இதை கொடுக்க சொன்னாரு, ஒழுங்கு மரியாதையா எங்களோட மாப்பிள்ளைகிட்ட பேசுவதை நிறுத்திட்டு என் பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்டு ஓடிரு என சொல்கிறார்கள். ஆனால் நீத்து அதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை.
சிந்தாமணி கொடுக்கும் ஐடியா
இதன்பின்னர் சிந்தாமணி கிரிஷை பார்க்க ரோகிணியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது தான் முத்துவையும், மீனாவையும் வர சொல்லி இருப்பதாக சொல்கிறார். எதுக்கு அவங்கள கூப்பிட்டிருக்க, உன்னோட வீட்டுக்காரன கூப்டாலாச்சும் எதாவது புன்னியமா இருக்கும் என ஐடியா கொடுக்கிறார். நீ மனோஜுக்கு போன் பண்ணி கிரிஷை வந்து பார்க்க சொல்லு என சிந்தாமணி சொல்லி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது? மீனாவும், முத்துவும் கிரிஷை பார்த்தார்களா? சிந்தாமணியின் மகள் ரேகாவின் காதலை மீனாவின் தம்பி சத்யா ஏற்றாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

