- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அருணிடம் சரண்டர் ஆன முத்து... ரவியை பிளாக்மெயில் செய்யும் நீத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அருணிடம் சரண்டர் ஆன முத்து... ரவியை பிளாக்மெயில் செய்யும் நீத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்துக்காக அருணிடம் சமாதானம் பேச சென்றிருந்த முத்து அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்து உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பன் செல்வம், கார் ஓட்டிச் சென்றபோது அருணின் அம்மா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தினால் சிறையில் அடைக்கப்பட்ட செல்வத்தை அவரது நண்பன் முத்து ஜாமினில் வெளியே எடுத்தார். ஜாமினில் வந்தாலும் உன்னுடைய லைசன்சை கேன்சல் பண்ணுவேன் என அருண் சவால் விட்டிருந்த நிலையில், இருதரப்பு வக்கீல்களை வைத்து சமாதானம் பேச முடிவெடுத்து இருந்தார். அருணும் சமாதானப் பேச்சுக்கு வந்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
செட்டில்மெண்ட் பேசி முடித்த அருண்
செல்வம் தன்னால் ஒரு லட்சம் தான் தர முடியும் என கூறி இருந்த நிலையில், அதற்கெல்லாம் ஒத்துக் கொள்ளாத அருண், பேசாம நான் உன் அப்பா மேல கார் ஏத்தி கொன்னுட்டு உனக்கு காசு கொடுத்த ஒத்துப்பியா என முத்துவை பார்த்து கேட்க, அதனால் கடுப்பாகும் முத்து, அருணின் சட்டையை பிடித்து அடிக்க பாய்கிறார். அவர்களை அங்கிருந்தவர்கள் பிரித்துவிடுகிறார்கள். பின்னர் அருண் தனக்கு 25 லட்சம் வேண்டும் என கேட்கிறார். அதன்பின்னர் வக்கீல் பேசியதை அடுத்து சரி, 15 லட்சம் கொடுக்க சொல்லுங்க என சொல்கிறார். இதையடுத்து முத்து டிரைவர்கள் படும் கஷ்டத்தை எடுத்து சொன்ன பின்னர் 5 லட்சம் தருமாறு கூறுகிறார். இதற்கு 1 மாதம் டைம் கொடுத்திருக்கிறார் அருண். முத்துவும், செல்வத்திடம் பேசி ஒரு மாதத்தில் 5 லட்சத்தை கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
விஜயாவுக்கு வந்த டவுட்
இந்த பேச்சுவார்த்தை முடிந்து வீட்டுக்கு சென்ற முத்து மற்றும் மீனாவிடம், என்ன நடந்தது என்பதை விசாரிக்கிறார் அண்ணாமலை. முத்துவும் 5 லட்சம் கொடுப்பதாக பேசி முடிவெடுத்துள்ளதை கூற, அவ்வளவு பெரிய தொகையை எப்படி செல்வத்தால் கொடுக்க முடியும் என சொல்ல, அருகில் இருந்த விஜயா, எங்ககிட்டலாம் காசு எதுவும் கேட்காத என சொல்ல, உடனே அருகில் இருந்த மீனா, நாங்க உங்ககிட்ட கேட்க மாட்டோம், பைனான்சியரிடம் வாங்கிக் கொள்கிறோம் என சொல்கிறார். இதைக்கேட்ட விஜயாவுக்கு, லேசாக டவுட் வருகிறது. ஒருவேளை நாம் பைனான்சியரிடம் பணம் வாங்கியது இவளுக்கும் தெரிந்திருக்குமோ என சந்தேகப்படுகிறார்.
லவ் டார்ச்சர் பண்ணும் நீத்து
மறுபுறம் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரவியை உடனே வீட்டுக்கு வந்து தன்னை பார்க்காவிட்டால், தான் தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டே இருப்பேன் என போன் போட்டு நீத்து பிளாக்மெயில் பண்ணியதை அடுத்து வேறு வழியின்றி நீத்துவை பார்க்க கிளம்பிச் செல்கிறார் ரவி. அங்குபோய் நீத்துவிடம் இதெல்லாம் ரொம்ப தப்பு, நீங்க என்னை டார்ச்சர் பண்றீங்க என சொல்லி திட்டுகிறார். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத நீத்து, நான் எப்போலாம் உன்னை பாக்கணும்னு கூப்பிடுறேனோ அப்போலாம் நீ என்னை வந்து பாக்கணும் என சொல்ல ரவி கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார்.
கிரிஷுக்கு என்ன ஆச்சு?
கிரிஷுக்கு காய்ச்சல் அதிகம் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ரோகிணி, சிந்தாமணி அழைத்து வந்த டாக்டருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்கிறார். அதற்கு அவர் மாத்திரை கொடுங்கள், சரியாகாவிட்டால், நான் வந்து பார்க்கிறேன் என கூறுகிறார். காய்ச்சல் உடன் இருக்கும் கிரிஷ், முத்து, மீனாவின் பெயரை முனுமுனுத்தபடியே இருக்கிறார். இதைப்பார்த்த ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? கிரிஷை பார்க்க முத்துவும் மீனாவும் வருவார்களா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

