MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணிக்கு தெரியவரும் ரகசியம்... செல்வத்தை பழிவாங்கும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

ரோகிணிக்கு தெரியவரும் ரகசியம்... செல்வத்தை பழிவாங்கும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தனக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல ஆள் செட் பண்ணி இருப்பதை மனோஜ் மூலம் தெரிந்துகொள்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2026, 09:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் - ரோகிணி இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், அதற்காக வித்யா மற்றும் மலேசியா மாமா ஆகியோரை சாட்சிக்காக செட் பண்ணி இருக்கிறார் முத்து. மறுபுறம் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் ரவி அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதுமட்டுமின்றி ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிலேயே வேலை பார்க்க சம்மதிக்கிறார் ரவி. அவருக்கு முக்கிய கண்டிஷன் ஒன்றை போடும் ஸ்ருதி, அந்த நீத்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவரை வீட்டுக்கு வர மாட்டேன் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஸ்ருதியிடம் வேலைக்கு சேர்ந்த ரவி
Image Credit : jiohotstar

ஸ்ருதியிடம் வேலைக்கு சேர்ந்த ரவி

ஸ்ருதி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா, அவரை தனியாக அழைத்து சென்று அட்வைஸ் பண்ணுகிறார். ரவி உங்களோடு வேலை பார்க்க சம்மதித்ததே பெரிய விஷயம், அதற்குள் நீத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நீங்கள் அடம்பிடித்தால் இன்னும் பிரச்சனை தான் பெரிதாகும். அதற்கு கொஞ்சம் டைம் கொடுங்க என கேட்க, உடனே ஓகே சொன்ன ஸ்ருதி, ரவியை உடனடியாக வேலைக்கு சேரச் சொல்கிறார். பின்னர் வீட்டுக்கு போய் தான் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிலேயே வேலைக்கு சேர்ந்த விஷயத்தை ரவி சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Related Articles

Related image1
டைவர்ஸ் கேஸில் ரோகிணி தரப்போகும் ட்விஸ்ட்... சிக்கப்போகும் விஜயா - சிறகடிக்க ஆசையில் அதிரடி திருப்பம்
Related image2
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்.! பணம் கொடுத்தாலும் பலிக்கவில்லை! ரோகிணிக்கு எதிராகத் திரும்பிய சாட்சிகள்.!
35
மனோஜ் ஷோரூமில் ரோகிணி
Image Credit : jiohotstar

மனோஜ் ஷோரூமில் ரோகிணி

பின்னர் ஷோரூமிற்கு மனோஜின் நண்பன் மொட்டை சந்தோஷ் லேட்டாக வருகிறார். ஏன் லேட்டு என மனோஜ் கேட்க, அதற்கு உங்க விஷயமா தான் அலைஞ்சிட்டு வர்றேன் என கூறுகிறார் சந்தோஷ். என்னோட விஷயமா என்ன என மனோஜ் கேட்க, அந்த சந்தோஷும் தான் உங்கள் டைவர்ஸ் கேஸுக்கு சாட்சி சொல்ல மலேசியா மாமாவை பார்த்து பேசிவிட்டு வருவதாக கூறுகிறார். அந்த நேரம் பார்த்து ரோகிணி உள்ளே எண்ட்ரி கொடுக்கிறார். நாம பேசியதெல்லாம் ரோகிணிக்கு கேட்டிருக்குமோ என மனோஜ் பயப்படுகிறார். அதை ரோகிணியிடமே அவர் கேட்க, அவர் தனக்கு தெரியாததை போல் காட்டிக் கொள்கிறார்.

45
செல்வத்தின் லைசன்ஸை கேன்சல் பண்ணும் அருண்
Image Credit : jiohotstar

செல்வத்தின் லைசன்ஸை கேன்சல் பண்ணும் அருண்

ஆனால் உண்மையில் ரோகிணி அவர்கள் பேசியது எல்லாவற்றையும் ஒட்டுக் கேட்டிருக்கிறார். எனக்கு எதிரா சாட்சி சொல்ல ஆள் செட் பண்றீங்களா... நான் உனக்கு எப்படி செக் வைக்குறேன்னு பாரு என மனசுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார். மறுபுறம் செல்வத்தை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார் முத்து. அப்போது சிறையில் இருந்து வெளியே வந்த செல்வம் முத்துவை பார்த்து கதறி அழுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் அருண், வெளிய வந்துட்டேன்னு சந்தோஷப்படாத, இனி ஜென்மத்துக்கு நீ கார் ஓட்ட முடியாது. உன்னோட லைசன்ஸ கேன்சல் பண்ணுவதற்கான வேலைகளை செஞ்சிட்டு இருக்கேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இதைக்கேட்டதும் மனமுடைந்து போகும் செல்வம் கதறி அழுகிறார்.

55
கோர்ட்டில் நக்கலடிக்கும் ரோகிணி
Image Credit : jiohotstar

கோர்ட்டில் நக்கலடிக்கும் ரோகிணி

மறுதினம் டைவர்ஸ் கேஸிற்காக அனைவரும் கோர்டிற்கு செல்கிறார்கள். அங்கு வரும் ஸ்ருதியிடம் என்னமா இங்க வந்திருக்க என விஜயா கேட்க, நான் இந்த கோர்ட் சீனெல்லாம் சினிமால தான் பார்த்திருக்கேன். அதான் நேர்ல பார்க்கலாம்னு வந்தேன் என சொல்லுகிறார். பின்னர் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்திருக்க, ரோகிணி எண்ட்ரி கொடுக்கிறார். வந்ததும் விஜயாவை பார்த்து என்ன ஆண்டி மெலிஞ்சிட்டீங்க என நக்கலாக கேட்கிறார். அவர் பேச்சில் திமிர் தெரிவதை பார்த்து அனைவரும் கடுப்பாகிறார். இனி விசாரணையின் போது ரோகிணி என்னென்ன குண்டை தூக்கிப் போடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image2
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Recommended image3
Ayyanar Thunai: உயிருக்கே ஆபத்து! கூரையை பிரித்து வீட்டிற்குள் குதித்த சோழன் - சிக்கப் போவது யார்?
Related Stories
Recommended image1
டைவர்ஸ் கேஸில் ரோகிணி தரப்போகும் ட்விஸ்ட்... சிக்கப்போகும் விஜயா - சிறகடிக்க ஆசையில் அதிரடி திருப்பம்
Recommended image2
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்.! பணம் கொடுத்தாலும் பலிக்கவில்லை! ரோகிணிக்கு எதிராகத் திரும்பிய சாட்சிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved