- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்மயிலை காப்பாற்றிய கையோடு, அவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் மீனா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்மயிலை அவரது வீட்டில் இருந்து அவருடைய அம்மா பாக்கியம் துரத்திவிட்டதால், அவர் நேராக சென்று சரவணனை சந்திக்க செல்ல அவரும் திட்டி அனுப்பியதால், மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற மீனா, அவரை காப்பாற்றிவிடுகிறார். பின்னர் என்ன பிரச்சனை என விசாரிக்கும் போது தன் அம்மா தன்னை வீ்ட்டை விட்டு துரத்திவிட்டதை கூறி கண்ணீவிட்டு அழுகிறார் தங்கமயில். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்னென்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
மீனா வீட்டில் தங்கமயில்
தங்கமயிலை காப்பாற்றிய மீனா, அவரை அவருடைய அம்மாவீட்டில் விடாமல், நேராக தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வருகிறார். அங்கு வந்து தங்மயிலுக்கு சப்பாடு போட்டு சாப்பிட வைக்கிறார் மீனா, வேலை முடித்து லேட்டாக வீட்டுக்கு வரும் செந்தில், இதைப்பார்த்து பயங்கரமாக ஷாக் ஆகிறார். இவங்க இங்க என்ன பண்றாங்க என செந்தில் கேட்க, அவரை தனியாக அழைத்து செல்லும் மீனா, நடந்த விஷயத்தையெல்லாம் சொல்கிறார். அதற்கெல்லாம் செவிசாய்க்காத செந்தில், அவங்க எப்படி வேணா போகட்டும், அதைப்பத்தி நமக்கு என்ன கவலை என சொல்லிவிடுகிறார்.
வீட்டை விட்டு போகும் செந்தில்
வெளியே இருக்கும் தங்கமயிலுக்கு செந்தில் பேசுவதெல்லாம் கேட்கிறது. அதன்பின்னர் தங்கமயில் நான் கிளம்புறேன் என சொல்லிப்பார்க்கிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்தி, இப்போ நீ வெளிய போனா மறுபடியும் தற்கொலை பண்ணிக்க தான் போவ, அதனால எங்கயும் போகக் கூடாது. இன்னைக்கு நைட் என்கூட தான் இருக்கணும் என சொல்கிறார். இதையெல்லாம் கேட்கும் செந்தில், இவங்க இங்க இருந்தால் நான் இருக்க மாட்டேன் என சொல்லிவிட்டு செந்தில் வேகமாக வீட்டை விட்டு கிளம்புகிறார். அவர் நேராக தன்னுடைய அப்பா பாண்டியன் வீட்டுக்கு தான் செல்கிறார்.
சத்தம்போடும் பாண்டியன்
அங்கபோய் எல்லா விஷயத்தையும் செந்தில் சொல்லிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் எதையும் சொல்லாமல், மீனா உப்மா செய்ததால், இங்கு சாப்பிட வந்தேன் என சொல்கிறார். இதைக்கேட்ட பாண்டியன், ஏண்டா அவளே வேலையை முடிச்சுட்டு வந்து கஷ்டப்பட்டு உனக்கு சமைச்சு கொடுத்தா, நீ இங்க வந்து சாப்பிடுறியா, நீ கெளம்பு அங்கேயே போய் சாப்பிடு என சத்தம் போட்டு செந்திலை அனுப்பி வைக்கிறார். இதன்பின்னர் செந்தில், தன்னுடைய மாமனார் வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். அங்கு போய் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார்.
செந்திலுக்கு மாமனார் கொடுக்கும் ஐடியா
இதையடுத்து மீனாவின் அம்மா, அவருக்கு போன் போட்டு அட்வைஸ் பண்ணுகிறார். வழக்கம்போல் மீனா அதற்கெல்லாம் வளைந்துகொடுக்கவில்லை. இதன்பின்னர் செந்தில் மீனாவின் அம்மா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, அங்கேயே படுக்க இருக்கிறார். அப்போது செந்திலிடம் பேசும் மீனாவின் அப்பா, வீடு ஒன்னு விலைக்கு வருது வாங்குறீங்களா என கேட்க, அதெல்லாம் வாங்க என்கிட்ட காசு எங்க இருக்கு என சொல்கிறார் செந்தில். எப்பவுமே கவர்மெண்ட் சம்பளத்தை நம்பி இருக்கக்கூடாது என சொல்லும் மீனாவின் அப்பா, லஞ்சம் வாங்குவதற்கு செந்திலுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

