MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்

ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிடம் பாசமாக பேசிக்கொண்டிருந்த ரோகிணி திடீரென நான் தான் கிரிஷோட அம்மா என்கிற உண்மையை உலறுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2025, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : youtube/vijaytelevision

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கோவா சென்றிருந்த ரவி, அங்கு நடைபெற்ற ஃபுட் பெஸ்டிவலில் கலந்துகொண்ட பின்னர் சென்னை திரும்பினார். வரும்போது வீட்டில் உள்ள அனைவருக்கு கிஃப்ட் வாங்கி வந்திருந்தார் ரவி. இதையடுத்து ரூமுக்குள் சென்று பெட்டியில் உள்ள தன்னுடைய துணிகளை ரவி எடுத்து வைக்கும் போது நீத்துவின் டிரெஸ் ஒன்றும் அதில் இருந்தது. இதைப்பார்த்த ஸ்ருதி, உடனே நீத்துவுக்கு போன் போட்டு உங்க டிரெஸ் ஒன்னு தவறுதலாக ரவி சூட்கேஸுக்குள் வந்துவிட்டது. அதை வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கிறார். நாம அவங்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட டிரெஸ்ஸை வச்சா, இவ என்ன நமக்கே போன் போட்டு சொல்றா என நீத்து கன்பியூஸ் ஆகிறார்.

24
மனோஜிடம் உண்மையை சொன்ன ரோகிணி
Image Credit : youtube/vijaytelevision

மனோஜிடம் உண்மையை சொன்ன ரோகிணி

இதையடுத்து மனோஜ் கிரிஷின் ஸ்கூலுக்கு சென்று அவனது ரேங்க் கார்டு வாங்கியதால் குஷியில் இருந்த ரோகிணி, வீட்டுக்கு வந்ததும் மனோஜை கட்டிப்பிடித்து நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என சொல்கிறார். நீ எதுக்கு சந்தோஷமா இருக்க என மனோஜ் கேட்கையில், ஏன்னா நான் தான் கிரிஷோட அம்மா என சொல்கிறார் ரோகிணி. என்னது நீ அம்மாவா என மனோஜ் கேட்க, அய்யய்யோ சந்தோஷத்தில் உண்மையை உலறிட்டோமே எனக்கூறி தனக்குள் கல்யாணியின் ஆவி வந்தது போல் நடித்து மனோஜை நம்ப வைத்து நைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறார் ரோகிணி.

Related Articles

Related image1
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Related image2
சீதா எடுத்த முட்டாள்தனமான முடிவு... நீத்துவால் வில்லங்கத்தில் சிக்கும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
34
ரோகிணியை காட்டிக்கொடுத்த கிரிஷ்
Image Credit : youtube/vijaytelevision

ரோகிணியை காட்டிக்கொடுத்த கிரிஷ்

இதையடுத்து, கிரிஷிடம் மனோஜை டாடி என அழைக்குமாறு ரோகிணி சொல்ல, அவனும் அப்படியே செய்கிறான். அவன் மனோஜை டாடி என அழைத்ததை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். நீ ஏண்டா என் புள்ளைய டாடினு சொல்ற என விஜயா டென்ஷன் ஆக, அண்ணாமலை கிரிஷை அழைத்து, நீயா அவனை அப்பானு சொன்னியா இல்லேனா உன்னை யாராவது சொல்ல சொன்னாங்களா என கேட்க, அதற்கு கிரிஷ், ரோகிணியை கைகாட்டுகிறார். பின்னர் ரோகிணி, அய்யய்யோ மாட்டிவிட்டுட்டானே என பதற்றத்துடன் வந்து ஒரு பொய்யை சொல்லி எஸ்கேப் ஆகிறார்.

44
கிரிஷின் டாடியாக மாறிய மனோஜ்
Image Credit : youtube/vijaytelevision

கிரிஷின் டாடியாக மாறிய மனோஜ்

இதையடுத்து கிரிஷ் தன்னுடைய ரேங்க் கார்டை எடுத்து வந்து மனோஜிடம் கையெழுத்து போட சொல்கிறார். முதலில் மறுக்கும் மனோஜை ரூமுக்குள் அழைத்து செல்லும் ரோகிணி, தனக்குள் கல்யாணியின் ஆவி வந்ததுபோல் நடித்து அவனை கையெழுத்து போட சொல்கிறார். அந்த மக்கு மனோஜும் அதை நம்பி உடனே வந்து கிரிஷின் ரேங்க் கார்டில் கையெழுத்து போடுகிறார். இதையெல்லாம் பார்த்த மீனா, ரோகிணியை மகேஸ்வரி வீட்டுக்கு அழைத்து அங்கு அவரிடம் சண்டை போடுகிறார். உண்மையை சொல்லாம இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி பொய் சொல்லிகிட்டு இருக்க போற என கேட்கிறார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Singappenne : ஆனந்தி - அன்புவின் ஜாலி மொமெண்ட்ஸ்! கோகிலாவை அதிர வைத்த மாமனார் & மாமியார்.. கதையில் புதிய திருப்பம்!
Recommended image2
ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Recommended image3
Chellame Chellame: பாக்கியலட்சுமியின் அதிரடி வேட்டை! விஜி-யின் ரகசிய பிளான்.. உண்மையை உடைப்பாரா பாக்கியா?
Related Stories
Recommended image1
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
சீதா எடுத்த முட்டாள்தனமான முடிவு... நீத்துவால் வில்லங்கத்தில் சிக்கும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved