- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீது தப்பு இருப்பதாக அருணின் அம்மா ஏத்திவிட்ட நிலையில், சீதா அதை நம்பி, மீனாவிடம் சண்டைபோட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கிரிஷை தத்தெடுக்கும் முடிவுக்கும் மீனா மறுப்பு தெரிவித்த நிலையில், வீட்டில் வந்து இந்த விவகாரத்தை பற்றி அனைவர் முன்னிலையிலும் பேசுகிறார் முத்து. அப்போது எதற்காக கிரிஷை தத்தெடுக்க மறுத்த என மீனாவிடம் அண்ணாமலை கேட்க, நான் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறேன் மாமா என மீனா சொல்கிறார். இதைக்கேட்ட ரோகிணிக்கு பதற்றம் ஏற்படுகிறது. கிரிஷ் தன்னுடைய மகன் என்கிற உண்மையை மீனா சொல்லிவிடுவாரோ என்கிற பயத்திலேயே இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மீனாவை பாராட்டும் விஜயா
கிரிஷை, தான் தத்தெடுக்க சம்மதிக்காததற்கு காரணம், நாளைக்கே எனக்கும், முத்துவுக்கும் குழந்தை பிறந்தால், கிரிஷ் மீது பாசம் குறைந்துவிடுமோ என்கிற பயம் தான் என கூறுகிறார் மீனா. சொந்த பிள்ளையா, தத்து பிள்ளையா என்கிற பாகுபாடு வந்துவிடுமோ என்கிற பயத்தில் தான் இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார் மீனா. இதைக்கேட்ட அண்ணாமலை உன்னுடைய தரப்பிலும் நியாயம் இருப்பதாக சொல்கிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக விஜயா, மீனாவின் இந்த முடிவுக்கு கைதட்டி அவரை பாராட்டி பேசுகிறார். ரோகிணியும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.
அருணின் அம்மா போட்ட கண்டிஷன்
மறுபுறம் முத்துவிடம் அடிவாங்கிய அருண் வீட்டில் கோபத்துடன் அமர்ந்திருக்க, அருணின் அம்மா சீதாவை சாடி பேசுகிறார். உன்னையும் உன்னுடைய அம்மா, தம்பியை நாங்க ஏற்றுக்கொள்வோம். ஆனால் உன்னுடைய மாமாவையும், அவனை கண்டிக்காத உன்னுடைய அக்காவையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இனி அவர்களிடம் நீயும் பேசக்கூடாது. உன்கூட கடைசி வரைக்கும் வாழப்போறது அருண் தான், முத்துவும், மீனாவும் உன்னோட வாழ்க்கையில தேவையானு நீயே யோசிச்சிக்கோ என சொல்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார் சீதா.
கோபத்தில் கொந்தளித்த சீதா
இதையடுத்து மீனாவின் அம்மா வீட்டில் வைத்து பஞ்சாயத்து நடக்கிறது. அங்கு வரும் சீதா, முத்துவிடம் கறாராக பேசுகிறார். இனி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்வதோடு, என்னுடைய கணவர் போலீஸ் ஆக இருக்கப்போய் தான் அமைதியா இருக்காரு, இவர மாதிரி ரெளடித்தனமெல்லாம் அவருக்கு தெரியாது என சீதா சொன்னதும் டென்ஷன் ஆகிறார் மீனா. இதையடுத்து சத்யாவும் சீதாவை சமாதானப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் சீதா யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

