MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மயக்கம் போட்டு விழுந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் டாக்டர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துள்ள ஜனனி வீட்டுக்கு வந்ததை அடுத்து அவரை உற்சாகம் பொங்க பெண்கள் வரவேற்றுள்ளனர். அவரின் வரவால் ஆதி குணசேகரனும் அவரது தம்பிகளும் அப்செட்டாகி இருந்தாலும், வீட்டில் ஆதி முத்துவுக்கு திதி கொடுப்பதற்கான வேலைகள் அனைத்தும் முழுவீச்சில் நடக்கிறது. அதற்காக அனைவருக்கும் புது டிரெஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறார் ஆதி குணசேகரன். அதை அனைவரும் உடுத்தி வந்து பூஜையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஜனனி கர்ப்பம்
Image Credit : youtube/suntv

ஜனனி கர்ப்பம்

பூஜையின் போது திடீரென எழுந்து சென்ற ஜனனி வாந்தி எடுத்திருக்கிறார். பின்னர் தனக்கு மயக்கம் வருவதாக சொன்னதை அடுத்து அவரை மாடிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். சக்தி, டாக்டரை போன் போட்டு வரச்சொல்லி இருக்கிறார். பூஜை நல்லபடியாக நடக்கக் கூடாது என்பதற்காக தான் ஜனனி இப்படி டிராமா போடுகிறார் என அறிவுக்கரசி சொல்ல, சிறிது நேரத்தில் டாக்டர் வந்து ஜனனியை செக் பண்ணுகிறார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட சக்தி, விசாலாட்சி, நந்தினி, ரேணுகா, தர்ஷினி, பார்கவி ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள்.

Related Articles

Related image1
குணசேகரனின் பிளானில் மறைந்திருக்கும் மர்மம்... போலீசில் புகார் அளிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
வீட்டுக்கு வந்த ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
35
சக்தியிடம் டாக்டர் சொன்ன பிரச்சனை
Image Credit : youtube/suntv

சக்தியிடம் டாக்டர் சொன்ன பிரச்சனை

இருந்தாலும் ஜனனி மிகவும் வீக் ஆக இருப்பதாக சொல்லும் டாக்டர், ஜனனி இனிமே நல்லா ரெஸ்ட் எடுக்கணும், ஹெல்தியா சாப்பிடனும் என சொல்கிறார். பின்னர் சக்தியிடம் பேசும் டாக்டர், மாலையில் ஜனனியை கிளீனிக் அழைத்து வரச் சொல்கிறார். அங்கு ஒருமுறை ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் என கூறுகிறார். கிளம்பும் முன் சக்தியை தனியாக அழைத்து பேசுகிறார் டாக்டர். ஜனனி ரொம்ப வீக்கா இருக்காங்க. அதை நம்ம, சாப்பாட்டாலும், மாத்திரையாலும் சரி பண்ணிவிடலாம். ஆனால் அவர் எந்தவித பிரஷரும் இல்லாமல் மன நிம்மதியோடு இருப்பது ரொம்ப முக்கியம். வேற எதுவும் பிரச்சனை இல்லை என கூறுகிறார் டாக்டர்.

45
பூரிப்பில் விசாலாட்சி
Image Credit : youtube/suntv

பூரிப்பில் விசாலாட்சி

ஜனனி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் சிந்தும் விசாலாட்சி, என் மனசுல உன்னைப் பத்தி ஆயிரம் சந்தோஷம் இருந்தாலும், ஒரே ஒரு குறை இருந்துட்டே இருந்தது. ஆண்டவன் புன்னியத்துல அதுவும் நிறைவேறிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மற்ற பேரப்பிள்ளைகளெல்லாம் பிறக்கும் போது, நான் வேறமாறி இருந்தேன். ஆனால் உன் புள்ள பிறக்குறப்போ தெளிவா இருக்கேன். இதை நான் எப்படி கொண்டாடப்போறேன்னு பாரு. உன்னையும், என் பேரப்பிள்ளையும் நான் தான் பாத்துக்குவேன் என விசாலாட்சி சொல்ல, நாங்களும் பாத்துக்குவோம் என கவுண்டர் கொடுக்கிறார் நந்தினி.

55
அடுத்த ட்விஸ்ட் என்ன?
Image Credit : youtube/suntv

அடுத்த ட்விஸ்ட் என்ன?

ஜனனி கர்ப்பமான விஷயம் ஆதி குணசேகரன் கேங்குக்கு தெரிய வந்தால் என்ன செய்யப்போகிறார்கள்? அதுவும் அறிவுக்கரசியை வைத்து ஜனனியின் கர்ப்பத்தை களைக்க பிளான் போடவும் வாய்ப்பு இருக்கிறது. ஜனனி குழந்தை பெற்றெடுப்பதற்குள் என்னென்ன பிரச்சனையெல்லாம் சந்திக்கப் போகிறார். டாக்டர் மன நிம்மதி முக்கியம் என சொல்லி இருக்கிறார். அது ஜனனிக்கு கிடைப்பது கஷ்டம். அதனால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Recommended image2
திரும்ப வந்த கருணாகரன் ; அதிர்ச்சியில் உறைந்த அன்பு ஆனந்தி... சிங்கப்பெண்ணே அதிரடி திருப்பம்!
Recommended image3
Chellame Chellame: அம்மாவிடம் உண்மையை சொன்ன விக்ரம்; விஜியை போட்டுத்தள்ள பிளான் போடும் லட்சுமி!
Related Stories
Recommended image1
குணசேகரனின் பிளானில் மறைந்திருக்கும் மர்மம்... போலீசில் புகார் அளிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
வீட்டுக்கு வந்த ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved