MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு தேவசகாயம் மூலம் அனைத்து உண்மைகளும் தெரியவந்திருக்கிறது. இதன் பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 04 2026, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி மற்றும் ரேணுகாவிடம் இருந்து விவாகரத்து கேட்ட கதிர் மற்றும் ஞானத்திடம், தாங்கள் உறவுக்காரர்கள் முன்னிலையில் தான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுவோம் என அவர்களின் மனைவிகள் சொல்லிவிட, மறுதினமே உறவினர்கள் அனைவரையும் வர வைத்து கையெழுத்து போடச் சொன்னார் கதிர். ஆனால் அந்த விவாகரத்து பத்திரத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதை படித்துக் காட்டிய நந்தினி, தனக்கு இந்த சொத்தில் இருந்து 20 சதவீத பங்குகளை கொடுத்தால் தான் கையெழுத்து போடுவேன் என சொல்லிவிட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட ஆக்‌ஷன்
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட ஆக்‌ஷன்

நந்தினியின் தடாலடி முடிவால் தம்பிகளுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற ஆதி குணசேகரனின் பிளான் மொத்தமும் சொதப்பியது. அதுமட்டுமின்றி வந்திருந்த உறவினர்கள் அனைவரும் இதனால் நாம் வம்பில் சிக்கி விடுவோமோ என பயந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் தன் தம்பிகளை மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஆதி குணசேகரன். அப்போது அடுத்து என்ன செய்யலாம் என கதிர் கேட்க, அதற்கு ஆதி குணசேகரன், நான் உங்களுக்கு ஒன்னு சொல்லனும்னா, நீங்க உங்க பொண்டாட்டிகளை அடக்கி வையுங்க, இல்லேனா அடக்கம் பண்ணீருங்க என கூறுகிறார்.

Related Articles

Related image1
அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Related image2
மவனே டைவர்ஸா கேக்குற... கதிரை பழிவாங்க நந்தினி போட்ட பலே பிளான் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
34
ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Image Credit : youtube/suntv

ஜனனிக்கு தெரியவரும் உண்மை

கீழே விசாலாட்சியும், ரேணுகாவும் பேசிக் கொண்டிருக்கையில், எதுவும் திட்டம் போடுறாங்களா என விசாலாட்சி கேட்க, உங்க மூத்த மகன் தான் போடுவாரு, மத்தவங்கள்லாம் சுத்தி வாயப்பாத்துகிட்டு உட்காந்துட்டு இருப்பாங்க என நக்கலடிக்கிறார். மறுபுறம் தேவசகாயம், ஜனனியிடம் வெளியே என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொன்றாக சொல்கிறார். குறிப்பாக உங்களுக்கு உதவியாக இருந்த மதிவதினி என்கிற கலெக்டரின் பதவி பறிக்கப்பட்டு அவரை காத்திருப்பு பட்டியலில் போட்டிருக்கிறார்கள். அதேபோல் கொற்றவையையும் இந்த கேஸில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறார்கள் என சொல்கிறார்.

44
அடுத்தடுத்த ட்விஸ்ட் என்ன?
Image Credit : youtube/suntv

அடுத்தடுத்த ட்விஸ்ட் என்ன?

தேவசகாயம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, எனக்கு உதவி பண்ணுனவங்களுக்கெல்லாம் இப்படியா நடக்கணும் என ஃபீல் பண்ணுகிறார். அவரை சமாதானப்படுத்தும் தேவசகாயம், நீங்க கவலைப்படாதீங்க, சீக்கிரமே இந்த பிரச்சனையில் இருந்து உங்களை வெளியே கொண்டு வருகிறேன் என சொல்கிறார். இதன்பின்னர் என்ன ஆனது? ஜனனி இந்த பொய் கேஸில் இருந்து தப்பித்தாரா? ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு நந்தினியையும், ரேணுகாவையும் அவரது தம்பிகள் தீர்த்துக் கட்டப்போகிறார்களா? தேவசகாயம் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிலா கொடுத்த பலே ஐடியா... பெரியப்பாவை கடத்திய சோழன் - அய்யனார் துணை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
அருணிடம் சரண்டர் ஆன முத்து... ரவியை பிளாக்மெயில் செய்யும் நீத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Related Stories
Recommended image1
அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
மவனே டைவர்ஸா கேக்குற... கதிரை பழிவாங்க நந்தினி போட்ட பலே பிளான் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved