சனிக்கிழமை அதுவுமா தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று விழுப்புரம், முடிச்சூர், மடம்பாக்கம் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம், சென்னை பிரதான சாலை, திருச்சி மெயின் ரோடு, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓ.எம்.சக்தி நகர், மரகதபுரம், கப்பூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
முடிச்சூர்
அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஸ்தலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், விஎம் கார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
மடம்பாக்கம்
படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர்.
பெருங்களத்தூர்
காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (ஏரணியம்மன் கோயில் பின்புறம்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

