MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவிலுக்குள் வைத்தே 2 பேர் கொடூரமாக கொ*லை! கொடிமரத்தில் கிடந்த உடல்கள்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?

கோவிலுக்குள் வைத்தே 2 பேர் கொடூரமாக கொ*லை! கொடிமரத்தில் கிடந்த உடல்கள்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், இரண்டு காவலர்கள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். உண்டியல் பணத்தை திருட முயன்ற மர்ம நபர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 11 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலானது தென் தமிழகத்தில் பஞ்சபூத ஸ்தளங்களில் ஆகாய தளமாக விளங்கி வருகிறது. இக்கோவிலானது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோவில் நிர்வாகத்தினர் கோவிலை திறந்து பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

24
Image Credit : Asianet News

அதாவது அரிவாள் மற்றும் ஊர்மையான ஆயுதங்களால் ரத்த வெள்ளத்தில் காவலர்கள் பேச்சிமுத்து (50), சங்கரபாண்டியன் (65) ஆகியோர் கொடிமரத்தின் அருகே உயிரிழந்து கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?
Related image2
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்! முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்! உச்சக்கட்ட பதற்றத்தில் சென்னை!
34
Image Credit : our own

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாகவும், அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சித்த போது கொலை நடைபெற்றிக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

44
Image Credit : Asianet News

கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோவிலில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது. பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் வைத்து இரண்டு காவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image2
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image3
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Related Stories
Recommended image1
மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image2
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்! முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்! உச்சக்கட்ட பதற்றத்தில் சென்னை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved