MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்! முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்! உச்சக்கட்ட பதற்றத்தில் சென்னை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்! முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்! உச்சக்கட்ட பதற்றத்தில் சென்னை!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த ஜாமீன், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 11 2025, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்ஸ்ட்ராங் கொலை
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

24
14 பேர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்
Image Credit : our own

14 பேர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

சிறையில் இருந்த படியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 14 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடையீடடு மனு தாக்கல் செய்திருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Articles

Related image1
மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?
Related image2
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்! ஏ2 குற்றவாளி அஸ்வத்தாமன் எடுத்த அதிரடி முடிவு!
34
அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமீன்
Image Credit : our own

அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமீன்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நிபந்தனைகள் ஏற்க தயாராக இருப்பதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோகுல் மற்றும் ஹரிஹரன் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேர் ஜாமீனில் வெளியியே வந்ததை வந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

44
 தமிழக அரசு மேல்முறையீடு
Image Credit : Asianet News

தமிழக அரசு மேல்முறையீடு

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை
சென்னை
திமுக
உச்ச நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image3
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Related Stories
Recommended image1
மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image2
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்! ஏ2 குற்றவாளி அஸ்வத்தாமன் எடுத்த அதிரடி முடிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved