MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக கூட்டணியின் விருந்தை பார்த்து திமுக அணிக்கு அஜீரணமாகிடுச்சு.! போட்டுத்தாக்கும் தமிழிசை

பாஜக கூட்டணியின் விருந்தை பார்த்து திமுக அணிக்கு அஜீரணமாகிடுச்சு.! போட்டுத்தாக்கும் தமிழிசை

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் நாகேந்திரன் விருந்து அளித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 04 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அதிமுக பாஜக கூட்டணி
Image Credit : Asianet News

அதிமுக- பாஜக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் பாஜக- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விருந்து வைத்து அசத்தியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தூத்துக்குடியில் உதிரி பாகங்கள் தயாரிக்க காரணம் விமான நிலையம், துறைமுகம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

23
தமிழ்நாட்டிற்கு வரும்
Image Credit : Getty

தமிழ்நாட்டிற்கு வரும்

இந்த விரிவாக்கம் செய்யப்பட்டதால் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் நம்பிக்கை வந்து உள்ளது. இதனால் முதலீடு எப்படி வருகிறது என்றால் இந்திய பொருளாதாரம் மேம்பட்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு முதலீடு வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழகத்திற்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார். 

தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேறு நாட்டில் இருந்து வந்து ஒட்டு போடலாம். வெளி மாநில தொழிலாளர்களிடம் வேலை வாங்குவீர்கள். பிரியங்கா காந்தி எப்படி வயநாட்டில் வந்து நின்றார். அப்போது அங்கிருந்து வந்தவர்கள் ஒட்டு போட முடியாதா என்ன? எல்லாவற்றிக்கும் பயம்.

Related Articles

Related image1
சும்மா அதிருதுல்ல! 109 வகை உணவுடன் நயினார் வீட்டில் விருந்து! எடப்பாடிக்கு தடபுடல் கவனிப்பு!
Related image2
விஜய்யின் மதுரை மாநாட்டுக்கு சிக்கல்! கல்யாணம், பிறந்த நாள்னு கணக்கு சொல்லாதீங்க - போலீஸ் கெடுபிடி
33
திமுக அணிக்கு அஜீரணம்
Image Credit : Asianet News

திமுக அணிக்கு அஜீரணம்

2026ம் ஆண்டு தேர்தலில் திமுக, இந்தியா கூட்டணி தோற்க போகிறது என்பது சிதம்பரத்திற்கு நல்ல தெரியும். இப்போ கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர். தேர்தல் ஆணையம் சரியான விளக்கத்தை தந்து விட்டது என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக சார்பாக அளிக்கப்படஅதிமுக- பாஜக தலைவர்கள் இடையே நல்ல சந்திப்பு. மேடைகளில் மட்டுமில்லாமல் விருந்துகள் முலமாகவும் சந்தித்து கொள்ளலாம். 

நல்ல விருந்து பாரம்பரிய, சிறு தானிய, வெளி நாட்டு உணவு வகைகள் இருந்தன. நாங்கள் மகிழ்ச்சியாக உண்டு ஆரோக்கியமாக இருக்கிறோம். கூட்டணி விருந்தை பார்த்து சிலருக்கு அஜீரணம் வந்து விட்டது. திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதிமுக- பா.ஜ.க. கூட்டணி குறித்து என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் எங்களுக்கு கவலை இல்லை. நல்ல ஆரோக்கியமான சந்திப்பு என தெரிவித்தார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி அதிமுக
தமிழிசை சௌந்தரராஜன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
சும்மா அதிருதுல்ல! 109 வகை உணவுடன் நயினார் வீட்டில் விருந்து! எடப்பாடிக்கு தடபுடல் கவனிப்பு!
Recommended image2
விஜய்யின் மதுரை மாநாட்டுக்கு சிக்கல்! கல்யாணம், பிறந்த நாள்னு கணக்கு சொல்லாதீங்க - போலீஸ் கெடுபிடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved