- Home
- Tamil Nadu News
- பறக்கும் அரண்மனை வந்தாச்சு.. அரசு வால்வோ பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடங்கள்? எவ்வளவு கட்டணம்?
பறக்கும் அரண்மனை வந்தாச்சு.. அரசு வால்வோ பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடங்கள்? எவ்வளவு கட்டணம்?
புதிய வால்வோ பேருந்துகளை பொறுத்தவரை சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 2 பேருந்துகளும், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 2 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு வால்வோ பேருந்துகள்
ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும்விதமாக தமிழக அரசு ரூ.34.30 கோடி மதிப்பில் 20 அதிநவீன வால்வோ பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. அரண்மனை போன்று காட்சியளிக்கும் இந்த பேருந்துகளில் அதிநவீன வசதிகள் உள்ளன.
அதாவது பயணிகளுக்கு உயர்தர மற்றும் வசதியான இருக்கை அமைப்பு 2×2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 வசதியான இருக்கைகள், Calf Support UNOMINDA (Harita) VFX09 25 வசதியுடன் கூடிய இருக்கைகள், இரட்டை USB Mobile Charging Ports, பத்திரிகைகள், பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம் ஆகியவை உள்ளன.
என்னென்ன வசதிகள்?
பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தீ பாதுகாப்பு அமைப்பு, அவசரநிலையில் விரைவாக பயணிகளை வெளியேற்ற அகலமான Roof Escape Hatch, முன், பின் மற்றும் பக்க மோதல்களில் தாக்கத்தை குறைக்கும் FUP / FIP / SUPD அமைப்புகள், மேம்பட்ட Rollover & Pedestrian பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
புதிய வால்வோ பேருந்துகளை பொறுத்தவரை சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 2 பேருந்துகளும், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 2 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த வழித்தடங்கள்?
மேலும் சென்னை டூ திருச்செந்தூர், சென்னை டூ திருப்பூர், சென்னை டூ பெங்களூரு, சென்னை டூ திருச்சி, சென்னை டூ கோவை, கோவை டூ பெங்களூரு ஆகிய வழித்தடங்களுக்கு தலா 2 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை டூ தஞ்சாவூர், சென்னை டூ சேலம் வழித்தடங்களுக்கு தலா 1 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
எவ்வளவு கட்டணம்?
அரசு வால்வோ பேருந்துகளின் கட்டணங்களை பொறுத்தவரை சென்னை டூ நாகர்கோவிலுக்கு 1,275 ரூபாயும், சென்னை டூ நெல்லைக்கு 1,054 ரூபாயும், சென்னை டூ திருச்செந்தூருக்கு 1.170 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை டூ மதுரை ரூ.845, சென்னை டூ பெங்களூரு ரூ.770, சென்னை டூ தஞ்சாவூர் ரூ.700, சென்னை டூ சேலம் ரூ.600, சென்னை டூ திருப்பூர் ரூ.860, சென்னை டூ கோவை ரூ.935, கோவை டூ பெங்களூரு ரூ.770 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

