MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் மானியத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு; பெறுவது எப்படி?

விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் மானியத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு; பெறுவது எப்படி?

Agriculture :  தமிழக அரசு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.10 கோடி வரையிலான திட்டங்களுக்கு 25% முதலீட்டு மானியமும், பெண்கள், ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு 35% மானியமும் வழங்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 11 2025, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Farmers Subsidy
Image Credit : Google

Farmers Subsidy

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேளாண் பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்" என்று மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பினைச் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும்

25
1.50 கோடி ரூபாய் வரை மானியம்
Image Credit : iSTOCK

1.50 கோடி ரூபாய் வரை மானியம்

தொழில்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 

இத்திட்டம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் தக்காளி, மிளகாய், மஞ்சள், வாழை, முருங்கை, LDIT. மல்லிகை, சிறுதானியங்கள் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்கவேண்டும்.

Related Articles

Related image1
2 நாள் விடுமுறை! போக்குவரத்துக் கழகம் சொன்ன குட்நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Related image2
இவ்வளவு கம்மியான வட்டியா.!! மகளிர்களுக்கு உடனே ரூ.1.25 லட்சம்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
35
திட்டங்கள் என்ன.?
Image Credit : Freepik

திட்டங்கள் என்ன.?

அதாவது தக்காளி கூழ், தக்காளி கெச்சப், தக்காளி பவுடர், தக்காளி ஜாம், மாம்பழக்கூழ், மாம்பழ ஜாம், மா பவுடர், மஞ்சள் ஓலியோரெசின், மஞ்சள் இலை எண்ணெய், வாழைப்பழ ஸ்டார்ச் பவுடர், வாழை சிப்ஸ், முருங்கை இலைப் பொடி, முருங்கை விதை எண்ணெய், மிளகாய்ப் பொடி, மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், மிளகாய் ஓலியோரெசின், மிளகாய் துகள்கள்,

 மல்லிகை வாசனைத் திரவியங்கள்,சிறுதானிய சத்துமாவு, சிறுதானிய தின்பண்டங்கள், சிறுதானிய கஞ்சிவகைகள், போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களும் இதில் அடங்கும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் ஐந்து சதவீதமாக இருக்க வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகப் பெறப்படவேண்டும்.

45
5 ஆண்டுக்கு 5 % வட்டி மானியம்
Image Credit : Getty

5 ஆண்டுக்கு 5 % வட்டி மானியம்

இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், மானியம் பெறுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத்தொகை அதிகபட்சமாக 

ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். மானியத் தொகையானது. இரண்டு தவணைகளில், அதாவது முதல் தவணையாக 60 சதவீத மானியமும், இரண்டாம் தவணையாக 40 சதவீத மானியமும் வேளாண் தொழில் முனைவோர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படும்.

55
தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பு
Image Credit : Getty

தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பு

ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில்களுக்கு ஏற்கனவே நிதி உதவி பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த பயனாளிகளுக்கு, இத்திட்டத்தின் அதிகபட்ச மானியத் தொகையிலிருந்து ஏற்கனவே வேறு ஏதாவது திட்டத்தில் பெற்றுவரும் மானியத்தொகை போக மீதத்தொகை மானியமாக வழங்கப்படும். 

எனவே, வேளாண் விளைபொருட்களை மதிபுக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி தரமான உற்பத்திப்பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து பொருளாதார ஏற்றம்பெற ஆர்வமுள்ள அனைத்து தொழில்முனைவோர்களும் இந்த அரிய பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விவசாயம்
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Recommended image2
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image3
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Related Stories
Recommended image1
2 நாள் விடுமுறை! போக்குவரத்துக் கழகம் சொன்ன குட்நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Recommended image2
இவ்வளவு கம்மியான வட்டியா.!! மகளிர்களுக்கு உடனே ரூ.1.25 லட்சம்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved