MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களே மிஸ் பண்ணிடாதீங்க! ரேஷன் கார்டு ஏதாவது குறையா? இனி அலைய வேண்டாம்! நாள் குறித்த தமிழக அரசு.!

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க! ரேஷன் கார்டு ஏதாவது குறையா? இனி அலைய வேண்டாம்! நாள் குறித்த தமிழக அரசு.!

Ration Card Correction: ரேஷன் கார்டு திருத்தங்களுக்காக சிறப்பு குறைதீர் முகாமை அறிவித்துள்ளது. சென்னையில் நவம்பர் 8, 2025 அன்று நடைபெறும் இந்த முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்கள் உடனடியாகப் பெறலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 06 2025, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரேஷன் கடைகள்
Image Credit : our own

ரேஷன் கடைகள்

ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

24
ரேஷன் கார்டுகள்
Image Credit : our own

ரேஷன் கார்டுகள்

ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை உடனடியாக பெற முடியும். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டமாக இருந்தாலும், பொங்கல் பரிசு தொகுப்பாக இருந்தாலும் ரேஷன் அட்டை ரொம்ப முக்கியமானது. அந்த வகையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல வித குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முக்கிய அறிவிப்பு வௌியாகியுள்ளது.

Related Articles

Related image1
இந்த முறை நயினார் நாகேந்திரனிடம் தோற்றால் திமுகவினரின் பதவி பறிக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
Related image2
அடிச்சு நொறுக்கப்போகுதாம் மழை! இந்த 12 மாவட்டங்களில் பறந்த எச்சரிக்கை!
34
 உணவு பொருள் வழங்கல் துறை
Image Credit : Google

உணவு பொருள் வழங்கல் துறை

இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 08.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

44
 பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்
Image Credit : our own

பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
குடும்ப அட்டை
ரேஷன் கடை

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
இந்த முறை நயினார் நாகேந்திரனிடம் தோற்றால் திமுகவினரின் பதவி பறிக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended image2
அடிச்சு நொறுக்கப்போகுதாம் மழை! இந்த 12 மாவட்டங்களில் பறந்த எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved